காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்
காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன. ஒன்று, கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக்கூறப்படாதது. கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான்செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணைஇட்டால், நிலைமை என்னவாகும்? ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிசுரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது கருநாடக அரசு. அது மட்டுமின்றிக், கருநாடகச் சட்டப்பேரவையைக் கூட்டித் தண்ணீர் திறந்து விட முடியாதுஎன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியது கருநாடக அரசு. உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கருநாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்! இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பதுஉறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும்நான்கு உறுப்பினர்கள் –ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு முதலான நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர் வீதம் நான்கு பேர். இதில் கருநாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள்நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும்தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கருநாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்புவராது என்று நேரடியாகத் தெளிவாக உறுதி கூற நரேந்திர(மோடி) அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டுச் சரிசெய்யுமா? கடந்த காலஅனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன. இவற்றுக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிசுரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம்ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்குத் தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது. இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது. மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் – விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும். – பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக்குழு ========================== செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு ========================== பேச: 76670 77075, 94432 74002 ========================== Fb.com/KaveriUrimai #SaveMotherCauvery…
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம் சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார். “இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல்…
தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் திஇநி பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 8-ஆம் ஆண்டு (2018-2019) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. சூன்…
பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு!
பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் – தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. “காவிரித் தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில்,…
தமிழ்ப்பேராய விருதுகள் 2018
தமிழ்ப்பேராய விருதுகள் 2018 திரு இராமசாமி நினைவு அறிவியல்-தொழில் நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு மடல் படவடிவில் உள்ளது. காண்க.
விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள்
விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள் பினராயி விசயன், திருநாவுக்கரசர் முதலானோருக்கு விருதுகள் அறிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத்து பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை…
உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு
உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் உலகக் கவிதைப் போட்டிக்கு படைப்பாளர்களின் அன்பு வேண்டுதலுக்கு இணங்க வைகாசி 13, 2049 27 மே 2018 வரை படைப்பாளர்கள் கவிதை அனுப்பக் கால நீட்டிப்பு செய்யப்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆனி/ஆடிததிங்களில் – யூலை- 2018 இல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளி, கல்லூரியில் பயிலும்…
குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக!
குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழில்லாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக! அன்பிற்கினிய தமிழக அரசே! அமைச்சர்களே! மாவட்ட ஆட்சியர்களே! தமிழக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களே! அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே! ஊடக உறவுகளே! சமூக சேவகர்களே! குவைத்தில் பல மாதங்களாக ஊதியமின்றி பாதிக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் குவைத்துத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்! குவைத்து கராஃபி தேசிய நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம்…
‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’, மாநாடு, சென்னை
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே சென்னையில் பிப்பிரவரி 3 அன்று மாநாடு “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், வரும் தை 21 / பிப்பிரவரி 3 / சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துத், தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், ஊர் நிருவாக அலுவலர்கள் (VAO) முதலான மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018…
மலேசியா-சிங்கப்புர் இலக்கியச் சுற்றுலா
நந்தவனம் சந்திரசேகரன் 94432 84823
பிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா!
பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப் பொங்கல் விழா! தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…
ஒன்பதின்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு
ஒன்பதின்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு 2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் தமிழக அரசின் விருதுகள் வரும் தை03 – சனவரி 16 அன்று சென்னையில் வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழாவில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார். விருது பெரும் தமிழறிஞர்கள் நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை, தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கிச் சிற்ப்பிக்கப்படுவர். விருதாளர்கள் : அ.சுப்பிரமணியன் – அண்ணாவிருது, தா. இரா.தினகரன் – காமராசர் விருது, கோ….
