புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை!
புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக ! அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்! புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தீமைகள் பெரும்பான்மை மக்கள் மொழியான தமிழுக்கும் வரலாற்றுக்கும் விளைவிக்கப்பட்டுள்ளன. ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்காமல் பிரஞ்சு மொழியில் மட்டும் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைமாற்றித் தமிழில் மட்டும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். தேவைப்பட் டால் சிறிய அளவில் ஆங்கிலத்தில் இருக்குமாறு உருவாக்கலாம்….
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…
தமிழ்நாட்டில் தெலுங்கர் ஆட்சியா? – பெ.மணியரசன்
தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை : தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வரும் ஐந்து நாள், ‘உலகத் தெலுங்கு மாநாட்டில்’ பேசியவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் பள்ளிக் கல்வியில் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள் என்ற செய்தி ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது. உலகத் தெலுங்கு மாநாடு, 15.12.2017இலிருந்து 19.12.2017 வரை ஐந்து நாள் நடந்தது. அம்மாநாட்டை 15.12.2017 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா(நாயுடு) குத்துவிளக்கேற்றித் தொடங்கி…
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…
அப்பாத்துரையார் நூற்றொகுதி வெளியீடு – தமிழ்மண் பதிப்பகம்
அப்பாத்துரையம் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் 110- ஆம் ஆண்டு நினைவு நூல் வெளியீட்டு முன்பதிவுத் திட்டம் தமிழ்மண் பதிப்பகம்
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில் பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர் முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர். சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர். சிலர்,…
தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? – வைகோ கண்டனம்
தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – வைகோ கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர்….
வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!
வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்! தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. குறித்த…
தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற
2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற தொல்காப்பியம் திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785 அல்லது 07915379101 எண்ணுக்கு அழையுங்கள். சுசிதா / Sujitha
தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம் திசம்பர் 2017
‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!
‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்! வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே! எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில்(eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும். இதனடிப்படையிலேயே நாம் ‘தமிழ் இலக்கிய வழி’…
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும்புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049
காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும் புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049 காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது. இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறும்…
