காவிரி மேலாண்மை வாரியம்: தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும்! – பெ. மணியரசன்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல்    தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்  பெ. மணியரசன் வேண்டுகோள்   காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பில் (புரட்டாசி14, 2047/30.9.2016)  கருநாடக அரசின் சட்டமுரண்செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச்  செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது.    நீதிபதிகள் தீபத்துமிசுரா யூ.யூ.இலலித்து அமர்வு, இது கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு அட்டோபர் 1 முதல்6 வரை தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கருநாடகத்திற்குக் கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது.  நடுவண் அரசு அட்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுஅமைத்து அறிக்கை தரவேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந் தாழ்ந்த நீதி என்றாலும் தமிழ் நாட்டிற்குப் பயன் தரும் தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள்,அனைத்து வணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட  தமிழ் மக்கள் அனைவர்க்கும்இந்த வெற்றியில் பங்கிருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கான தலைமை வழக்கறிஞராகச் சேகர் நபாதே அவர்களை அமர்த்தியதிலிருந்து நம் தரப்பு வாதம் கூர்மையாக எடுத்து வைக்கப்பட்டது. நடுவண் நீர் வளத்துறை அமைச்சர்…

காவிரித் தீர்ப்பு: நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள்! – பெ.மணியரசன்

காவிரித் தீர்ப்பு: வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்சநீதி மன்றம். நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே ! காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை.  காவிரிவழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கருநாடக அரசின் சட்ட முரண் செயல்களையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நடவடிக்கைகளையும்  மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. கருநாடகச் சட்டப்பேரவை மற்றும் மேலவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  உச்ச நீதிமன்றம் பதிவு செய்யும்…

அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன்,…

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!    உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.  நேற்று (21.09.2016)…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் –  நூற்றொடர் அறிவிப்பு   கோவை ஞானி அவர்களின் தமிழ்நேயம் 49 ஆவது வெளியீடாக  மாசி, தி.பி. 2043/ பிப்.கி.பி. 2012 வெளியீடாக வந்த நூல் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அடுத்த வாரம் முதல்  வெளிவரும் இவ்விதழின் முன்அட்டை,  உள் குறிப்பு (திருமணப்பரிசு என்ற முறையில் நன்றி அறிவிப்பு), பின் அட்டை (நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன்  எழுதிய இந்நூல் பற்றிய கோவை ஞானி அவர்கள் குறிப்பு) ஆகியன விவரங்களுக்காகத் தரப்படுகின்றன. வருமிதழ் முதல் படைப்பு தொடரும்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல்.     தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது.  10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் உதவுக!

தமிழன்புடையீர் தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு       2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு  அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது.    அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர…

சட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெறுவோர் – கி.வீரமணி கண்டனம்

அம்மணச் சாமியாரைச் சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் – வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா?  அமைச்சர்களை ஆர்.எசு.எசு.எசு. ஊதுகுழலாக்காமல் நாட்டு வளர்ச்சியின் பக்கம்  தலைமையாளர்(தலைமையமைச்சர்) திரும்பச் செய்யட்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை    வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று  பா.ச.க. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது  சரியா?  அம்மணச் சாமியாரை அரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றுக் கொள்ளும் பா.ச.க., வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது குறித்தெல்லாம் பேசலாமா? சக அமைச்சர்கள்…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்   தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி மொத்தப்பரிசு உரூபா. 3000.00 பரிசு வழங்குபவர் பொறிஞர் இரா.தேவதாசு அவர்கள்   கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.9.2016 முகவரி முனைவர் க.தமிழமல்லன் தலைவர் தனித்தமிழ் இயக்கம் 66.மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605009- தொ.பே 0413-2247072,9791629979 நெறிமுறைகள் அ4 தாளில் 4 பக்கம் கொண்ட குமுகாயக் கதைகள் பிறமொழிச்சொற்கள், பெயர்கள் கலவாத  நடையில் எழுதப்பெற வேண்டும்.  2. கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும் ஒருபடியில் மட்டும் பெயர் முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து…

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் :  தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலைப் பணிப்பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரம் வருமாறு: அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441  நாள் 29.07.2016 பணி:  இளநிலை  அறிவியல் அலுவலர்(Junior Scientific Officer) காலியிடங்கள்: 30…

காவித் துணிவேண்டா – பாரதியார்

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார்