வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்

வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை   யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும்.  1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண  மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…

குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !

குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்!   வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட  ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர்  தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 Thamizh Academy Awards – 2016 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited)   திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக…

‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்

‘இலக்கியச் சோலை’ மாத இதழ் சார்பில் தந்தையர்நாள் நிகழ்ச்சி வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை, சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது.   ‘அப்பா –  அப்பப்பா’ தலைப்பில் கவியரங்கம்.   நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க:  98405 27782.

இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்

சமூக ஆர்வலர்களே ! வணக்கம். ஒருவர் ஆற்றிலோ கடலிலோ விழுந்தால் காப்பற்ற யாரேனும் வருவார்கள். ஆனால் அவர்களே சாக்கடையில் விழுந்தால் அவர்கள் அண்மையில் இருப்பவனும் நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவானே ஒழிய காக்க வரமாட்டான். “யாராவது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று கூவிக்கொண்டுதான் இருப்பான்.  அதுபோலவேதான் நம் மக்கள் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவதும். அவர்களைக் கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது யாராவது அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்பதும் உங்களைச் சாக்கடையில் தள்ளிவிட்டு நாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டு தப்பி ஓடுகின்றோம் என்று அம்மக்கள் உணர்த்தத்தான்.  இதையறியாமலோ அறிந்தோ சமூக ஆர்வலர்களும்,…

அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.

  அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.   அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்! வைகோ அழைப்பு  தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு  நடைபெறுகிறது.   இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.   இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  மாற்று அரசியல் வெற்றி…

வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம்

  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழியற்புலத் தமிழியல்துறையின் சார்பாக  எதிர்வரும் ஆகத்து – (2016) திங்கள் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவும்,  “வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மையில் பல்கலை வளாகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.   எனவே, மதிப்பிற்குரிய மேனாள்துணைவேந்தர் அவர்களின் மீது நீங்காப் பற்றறுள்ள தமிழறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வளர்கள் துணைவேந்தர் அவர்களின் வாழ்வும் பணியும், அவருடைய படைப்புகள் தொடர்பாகவும் இன்ன பிற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம். ஆய்வுக் கட்டுரைகள் எந்தவிதப் பதிவுக் கட்டணமும்…

கவிதை உறவு -சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெறும் படைப்பாளர்களின் பட்டியல்

  கவிதைஉறவு ஆண்டு விழாவில் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெறும் படைப்பாளர்களின் பட்டியல் இது. கவிதைஉறவு ஆண்டு விழாவில் பரிசுகள் பெறப்போகும் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம்

15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற  ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து  . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக்  “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…

தமிழர்கள் எழுவரையும் காப்புவிடுப்பில்(parole)விடுவிக்கப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து  விடுத்துள்ள அறிக்கை!   இராசீவுகாந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.   கடந்த 24 ஆண்டுக் காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என்று 2014ஆம் ஆண்டு…

வெட்டிப் பதிவர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2016

வெட்டிப் பதிவர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2016 வணக்கம் வலைப்பதிவர்களே!   ‘வெட்டிப் பதிவர் முகநூல் குழுமம்’ வலைப்பதிவர்களுக்கென்று கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்குச் சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையைக் குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்குப் பறைசாற்ற இஃது அருமையான ஒரு வாய்ப்பு. உங்கள்…