பெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா

  வைகாசி 22, 2048 / சூன் 05, 2047 இக்சா மையம், எழும்பூர், சென்னை 600 008 சி.நாச்சியப்பனின் ‘பெரியாரும் பெரியோரும்‘ நூல் வெளியீட்டு விழா    

இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…

பரம்பரை வேளாண்மை: வேலை / தொழில் வாய்ப்புகள்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம்  நிறுவனமும்  இந்த மாதம் வைகாசி 12, 2048   வெள்ளிக்கிழமை   ( 26.05.2017) மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் – பாரதிய வித்யா பவனில்   பரம்பரை  வேளாண்மையையும்  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி  தலைமை : இயற்கை மருத்துவர் சு. முருகேசன்  இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு ப. சனகன்  (துறை :…

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

வைகாசி 13, 2048   சனிக்கிழமை 27-05-2017   மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை,  சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 566  ஆவது நிகழ்வு  “கவியோகி சுத்தானந்த பாரதி” உரையாற்றுபவர் : திரு. புதுவை இராமசாமி    குவிகம் இலக்கிய வாசலின் 26 ஆவது நிகழ்வு “புத்தகங்கள் வெளியிட எளிய  வழி” உரையாற்றுபவர் :   திரு  சிரீகுமார்   அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in  

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017  மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா   அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும்.  இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.     படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…

ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம்

  ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு :  பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் முதுகலை – உயராய்வு மையம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை  ஆடி 08 & 09, 2048 : திங்கள் & செவ்வாய்:  சூலை 24 & 25, 2017 கருத்தரங்கக்குழுத் தலைவர் முனைவர் ப.அனுராதா தொடர்புக்கு : முனைவர் இல.செ. திருமலை drthirumalai72@gmail.com

திருக்குறள் தொடர்சொற்பொழிவு, பாளையங்கோட்டை

வைகாசி 13, 2048 மே 27, 2017 மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை   தலைவர் – நல்லாசிரியர் புலவர் வை. இராமசாமி முன்னிலை –  தமிழ்மாமணி பேரா.முனைவர் வளன் அரசு  பொழிஞர்: தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா                              பொருள் : நீரினும் நன்றதன் காப்பு உலகத்திருக்குறள் தகவல் மையம்

பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாநோன்பு, பாளையங்கோட்டை

வைகாசி 07, 2048  ஞாயிறு 21.05.2017 காலை 9.00 முதல் மாலை 6.00 வரை சவகர் திடல், பாளையங்கோட்டை   தலைமை : இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை வைகாசி 04, 2048 / மே 18, 2017 மாலை 4.45 நூல்கள் வெளியீடு பரிசளிப்பு விருது வழங்கல் மலர் வெளியீடு (படங்களை அழுத்திப் பார்க்கவும்) – ஏர்வாடியார்

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல்   கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.  தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…

இலக்கியப் பெருவிழா, வைணவத் தமிழ் : தொடர் சொற்பொழிவு

வைகாசி 03, 2048 /  மே 17, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபை, சென்னை 600 018 கவியரங்கம் இன்னுரை எழிலுரை தேனுரை தொடருரை :  முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்  கலசலிங்கம்.- ஆனந்தம் சேவா சங்கம்