மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு, சென்னை
தோழமை கொண்டோருக்கு, “ மக்கள் கலைஞர்” கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் கவிக்கோ மன்றத்தில் மார்கழி 16, 2047 / 31-12-2016 அன்று நடைபெற உள்ளது. நட்புடன் பா.செயப்பிரகாசம்
எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி
எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி மார்கழி 10, 2047 / ஞாயிறு 25-12-2016 காலை 10.30 எழுத்தாளர் சாரு நிவேதிதா, எழுத்தாளர் குப்புசாமி, சார்வாகனின் உடன்பிறப்பு மரு.இராசன் அரிகரன் பேசுகிறார்கள் பரிசல் புத்தக நிலையம் இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலாப்பூர் (பெ.சு.பதினிலைப்பள்ளி எதிரில்)
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .
கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016 பிற்பகல் 2.00 மணி முதல் பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை . வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்…
பெரியார் 43-ஆவது நினைவு நாள் – பல்வழி அழைப்புக் கூட்டம்
பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பெரியார் 43-ஆவது நினைவு நாள் பல்வழி அழைப்புக் கூட்டம் பேரா.சுப.வீரபாண்டியன்: பெரியாரும் இன்றைய தமிழகமும் மார்கழி 08, 2047 / திசம்பர் 23, 2016 அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை அழைப்பு எண் (712)4321500 குறி: 951521# தரவு: சோம.இளங்கோவன்
‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ – சென்னை
பனுவல் புத்தக நிலையம், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் இணைந்து நடத்தும் ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ தலைமை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா: ’தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூலை வெளியிட்டு ‘நானும் ஐக்கூவும்’ பட்டறிவுப் பகிர்வு: இயக்குநர் என்.லிங்குசாமி …
நந்தவனம், பெங்களூரு சிறப்பிதழ் அறிமுக விழா
மார்கழி 03, 2047 / 18.12.2016 மாலை 5.30 மணி நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம்
பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்பு
வணக்கம். வரும் ஞாயிறு மார்கழி 03, 2047 / 18.12.2016, பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்பு. காலை 9 மணி முதல் நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைவரும் வருக. அன்புடன் அழைக்கிறோம் இரா. பூபாலன் <boobalanpoet@gmail.com>
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்
அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி – கார்த்திகை 28, 2047 / 13.12.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’ முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை: முனைவர் மா.ரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி இனியவன்
நினைவுகூர் நாள் 2016
நினைவுகூர் நாள் 2016 ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பர்னட்டு ஓக்கு பகுதியில்(St.Alphage…
கவிஞர் மு.முருகேசின் ஐக்கூ நூல்கள் வெளியீடு, சென்னை
கார்த்திகை 25, 2047 / 10.12.2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணி ஐக்கூவோடு கை குலுக்குவோம் மு.முருகேசு படைத்துள்ள ‘தமிழ் ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ கட்டுரைகள், ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூல்கள் வெளியீடு பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041. ஈரோடு தமிழன்பன் என்.லிங்குசாமி வசந்தபாலன் தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் பனுவல்
தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல், சென்னை
கார்த்திகை 12, 2047 / திசம்பர் 07, 2016 மாலை 6.00 பெரியார் மணியம்மை மன்றம்,சென்னை 600 007 தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல் கலிபூங்குன்றன் சந்திரகாசன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சா.கணேசன் மணிமேகலை கண்ணன் இதயதுல்லா உலகநாயகி பழனியப்பன் வா.மு.சே.திருவள்ளுவர் கண்மதியன் செந்தமிழ்ச்செழியன் வா.மு.சே.ஆண்டவர் திவாகரன் திராவிடர் கழகம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் பன்னாட்டுத் தமிழ் நடுவம்
பேராசிரியர் மாணவர்களுக்கான சிறப்புச்சொற்பொழிவு, திருச்சிராப்பள்ளி
கார்த்திகை 20, 2047 / திசம்பர் 05, 2016 காலை 9.30 ஈபெர் பாதிரியார் (Bishop Heber) கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத் துறை நடத்தும் பேராசிரியர்கள் – மாணவர்களுக்கான சிறப்புச்சொற்பொழிவு முனைவர் இரா.விசயராணி முனைவர் சி.வளர்மதி பேரா.முனைவர் மு.செம்மல் முனைவர் சா. சாம் கிதியோன்
