வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…

வெருளி நோய்கள் 489-493: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 484-488: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 489-493 எட்டின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் எட்டின் கூறு வெருளி.எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டின் கூறு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00

தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-இலக்குவனார் திருவள்ளுவன் 

(தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 6 பாணினியத்தின் சிறப்பு?! தொல்காப்பியம் இயல்பிலேயே தமிழாகிய சிறந்த மொழிக்கான இலக்கணம் என்பதால் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் பாணினியின் அட்டாத்தியாயி சிறப்பாகத் திரித்துக் கூறப்படும் சிறப்பற்ற மொழியான சமற்கிருததத்திற்கானது என்பதால் திரிக்கப்பட்ட சிறப்பையும் உண்மையில் சிறப்பின்மையையும் கொண்டுள்ளது. பாணினியத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்த பதஞ்சலி,  “இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்” என்று அட்டத்தாயி குறித்துக் கூறியுள்ளார். “எங்கப்பன் குதிருக்குள்…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும். தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த  நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று…

வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…

வெருளி நோய்கள் 479-483: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 476-478 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 479-483 எகல் என்பவர் கோட்பாடு குறித்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வதே எகலிய வெருளி.கியோர்கு வில்ஃகெம் பிரீட்ரிக்கு எகல் (Georg Wilhelm Friedrich Hegel)(1770 – 1831) என்பவர் புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார். இவரது கருத்துகளுக்கு ஆதரவு இருந்தது போல் சிலர் காரணமற்ற மிகை பேரச்சமும் கொண்டிருந்தனர்.00 எகித்து (Egypt), எகித்து மக்கள், எகித்து தொடர்பானவை மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் எகித்து வெருளி.எகித்திய வெருளி பல்வேறு வகைகளில் வெளிப்படும். குறிப்பாக…

வெருளி நோய்கள் 476-478 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 471-475 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 476-478 பல்லி, பாம்பு முதலான ஊர்வனமீதான அச்சமே ஊர்வன வெருளி.விலங்கு வெருளி, சிலந்தி வெருளி போன்றதே இதுவும். ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். இயல்பிலேயே அச்ச உணர்வு உள்ளவர்களுக்குப் பாம்பு முதலான ஊர்வன மீது பேரச்சம் வருவது இயற்கைதானே.பாம்பை அடித்துவிட்டு அது தப்பித்துச் சென்று விட்டால் மீண்டும வந்து பழிவாங்கும்; ஒரு பாம்பைக் கொன்றால் அதன் துணை நம்மைத் தேடி வந்து கொல்லும்; கொம்பேறி மூக்கன் என்னும் பாம்பு கொத்திய பிறகு மரத்தில்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010  1006. Authorities           அதிகார அமைப்புகள்‌ ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள் 1007. Authority inferior                கீழ்நிலை  அதிகாரி   எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி  1008. Authority, power and           அதிகாரமும்‌ அதிகார உரிமையும்‌ Authority  என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு,…

இலக்குவனார் சங்கத் தமிழ் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலக்குவனார் சங்கத் தமிழ் விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் சங்கத்தமிழை இணையத்தளங்கள், வலைப்பூக்கள், கட்டுரைகள், நூற்கள், சொற்பொழிவுகள், போட்டிகள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பும் சங்கத் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் சங்கத் தமிழ் விருது வழங்கப் பெறும். இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன வேண்டுகிறோம். சங்கத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களை…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்-தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 conference, seminar, symposium – தமிழில் . . . ?  ‘Consultation’, ‘discussion’, ‘Conference’ என்பனவற்றிற்கு என்ன சொல்ல வேண்டும்? Consultation என்பதற்குச் சரியான பழந்தமிழ்ச் சொல் சூழ்ச்சி என்பதாகும். இருப்பினும் இப்பொழுது சூழ்ச்சி என்பது “கலந்து பேசுதல்’ என்னும் பொருள் தராமல் சதி செய்வது போன்ற எதிர்மறையான எண்ணத்தைக் குறிக்கிறது. மருத்துவரிடமோ வழக்குரைஞரிடமோ…

வெருளி நோய்கள் 471-475 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 466-470 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 471-475 ஊர்தி விற்பவர் தொடர்பாக (வாங்குநருக்கு) ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஊர்தி விற்பனையாளர் வெருளி.ஊர்தி விற்பவர் ஊர்தி விற்பவர் தவறான அல்லது பொய்யான அல்லது மிகையான தகவல்களைக் கூறி ஏமாற்றுவார், அவரை நம்பி எங்ஙனம் ஊர்தியை வாங்குவது எனப் பேரச்சம் கொள்கின்றனர்.00 ஊர்திகள் தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் ஊர்தி வெருளி.amaxa or hamaxa, ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு வண்டி எனப் பொருள்.00 ஊர்திக் கொட்டில் கழுவிடம் (garage sink ) குறித்த வரம்பற்ற…

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3 ? தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்காவிட்டால் தமிழ்ப்பகைவர்கள் கை ஓங்கும் என்பது போல் கூறுகிறீர்களே! எப்படி? ஓர் எடுத்துக் காட்டு கூறுங்களேன். #  தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய  உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள்…