எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது- இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது-தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது எத்தனைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என இக்கோப்பில் இடம் பெற்றுள்ளது. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது. சான்றுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். இச்சொற்கள் வரும் முழுத் தாெடரை அளிக்காமல் சுருக்கமாகவே பார்ப்போம். அத்தனை கடைகளும் அத்தனை காவலர்களும் அத்தனை கிணறுகளிலும் அத்தனை கூடைகளில்…

வெருளி நோய்கள் 1261 -1265 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1256 -1260 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1261 -1265 திமிங்கிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திமிங்கில வெருளி.திமி என்பது மிகப்பேருரு கொண்ட மீன். திமி எனப்படும் அந்த மீனையே உட் கொள்வதால் திமிங்கிலம் எனப் பெயர் வந்தது என்பர். திமிங்கலம் என்று சொல்வது தவறு.75 வகைத் திமிங்கிலங்கள் உள்ளன. மிகப்பெரிய திமிங்கிலத்தின் பெயர் நீலத் திமிங்கிலம். இதன் நாக்கு 50 பேர் உட்காரும் அளவு பெரியது. கடற்பயணம் மேற்கொள்ளாவிட்டாலும் படங்களைப் பார்த்துத் திமிங்கிலங்களால் கண்டம்(ஆபத்து) வரும் எனக் காரணமற்ற பேரளவு அச்சம்…

குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 43 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ – 456) மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத செயல் எதுவுமில்லை. பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- புகழ்; நன்றாகும்-நன்மையுடையதாகும்; இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல். எச்சம் என்பதற்கு…

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026 சங்கப் புலவர்கள் பொன்னுரை – 31 தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! ‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை. நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4 நெய்தற் கலி இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பதவுரை: கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;…

வெருளி நோய்கள் 1256 -1260 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1251 -1255 :  தொடர்ச்சி( வெருளி நோய்கள் 1256 -1260 திசைகாட்டி(compass) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் திசைகாட்டி வெருளி.திசைகாட்டி சரியாகத் திசையைக் காட்டாமல் போனால், பயணம் மாறும், இலக்கு தவறும் என்பன போன்ற அளவுகடந்த காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்அச்சந் தொலைய கவலையைத் திசைகாட்டியாகக் கொண்டு முன்னேற வேண்டும் (Use Fear as Compass for Growth) என்பர்.00 திடல் அல்லது நிலத்தளம் குறித்த வரம்பற்ற பேரச்சம் திடல் வெருளி.திடலில் உள்ள சமனற்ற மேடும் பள்ளமுமான நிலைமை, குப்பைக் கூளங்கள் முதலியவற்றால் தொற்று…

இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக! : இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 5 கல்வி முறையை மாற்றுக! தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பின் அவ்வாறு பயில்பவர்கள்தாம் மிகுதியாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அறிவு வளர்ச்சிக்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகப் படிப்பு என்று மாறி விட்ட சூழலில் வேலைவாய்ப்பு இருப்பின் மட்டுமே தமிழ் வழியில் பயில்வர் என்பதை உணர வேண்டும். எனவே இப்போதைய அரசாவது  தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80%வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.வேலைப் பாதுகாப்பு இருப்பின் அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே…

வெருளி நோய்கள் 1251 -1255 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1246 -1250 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1251 -1255 மூச்சுத் திணறல் வரும் என்று தேவையின்றியும் தக்கக் காரணமின்றியும் வரும் அச்சமே திணறல் வெருளி. மூச்சுத்திணறல் வரும் பொழுது அதற்கு ஆட்பட்டவரும் அதைப் பார்ப்பவரும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளில் இறங்காமல் தீவிரமான எதிர் சிந்தனைகொண்டு அச்சம் அடைவதும் திணறல் வெருளிதான்.மூச்சடைப்பு வெருளி (choking phobia ) என்றாலும் இதுதான்.pnig என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூச்சுத் திணறல்.angino என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தாெண்டைத் தொற்று, மூச்சுத் திணறல் எனப் பொருள்கள்.00 திங்கட்கிழமைபற்றிய பெருங்கவலையும்…

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி இணைய உரை 06 பங்குனி 28, 2057 ஞாயிறு காலை 10.00 + 22.04.2026 சிறப்புரை: முனைவர் சாந்தினிபி முன்னை வரலாற்றுப் பேராசிரியர் அலிகார் பல்கைலக்கழகம் தலைப்பு : மூன்றாம் உலகப்போர் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் புத்தேரி தானப்பன் தலைவர்

வெருளி நோய்கள் 1246 -1250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1241-1245-தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1246 -1250 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042 1041. Awareness   விழிப்புணர்வு சட்ட விழிப்புணர்வு . தனி விழிப்புணர்வு, குமுக விழிப்புணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு, உணர்வு விழிப்புணர்வு, அமைப்பு விழிப்புணர்வு, உறவு விழிப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு, தொழில்நுட்ப விழிப்புணர்வு, நலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வு, ஊடக விழிப்புணர்வு, சுற்றுப்புற விழிப்புணர்வு, வரலாற்று விழிப்புணர்வு, முதலீட்டு விழிப்புணர்வு, சேமிப்பு விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு முதலியவாறாகப் பலவகைப்படும். தொடர்பான சிக்கல்கள் வழக்குகளில் இடம் பெறும்பொழுது தொடர்புடைய சொற்கள் சட்டச்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!  : இலக்குவனார்திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10 தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! “தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா  அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான…

வெருளி நோய்கள் 1241 -1245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1237 -1240 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1241 -1245 தாள் பிடிப்பி (paper clip) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாள் பிடிப்பி வெருளி.இதனை முதலில் செம் நிறுவனத்திற்காக (Gem Company) உருவாக்கியதால் இதனைச் செம் பிடிப்பி என்று பொதுவாகச் சொல்வர். இதனை மடக்கூசி என்றும் சொல்வர். ஊசி என்பது துளைப்பது. இது துளைப்பதல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட தாள்களை இறுகப் பிடிப்பது. எனவே, தாள்பிடிப்பி என்பது பொருத்தமாக இருக்கும்.00 தாள் பை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாள் பை வெருளி.தாள் பை…