மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்
மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது. தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது. இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார். தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார். இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை…
வெருளி நோய்கள் 371-375 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 371-375 இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.00 இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.காதல் தோல்வியால்கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே…
தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 2 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் எட்டு அத்தியாயங்களை உடைய நூல் என்னும் பொருளில் பாணினி தன் நூலுக்கு அட்டாத்தியாயி என்று பெயர் வைத்தார். தமிழில் அட்டம் என்றால் எட்டைக் குறிக்கும். எட்டுபோல் காலைக் குறுக்கே மடக்கி அமர்வதை அட்டக்கால் என்று இன்றும் கூறிவருகிறோம். தமிழ் அட்டத்திலிருந்து வந்ததே சமற்கிருத அசுட்டம். எனவே, எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்னும் பொருளில் அட்டகம் என்றும் கூறுகின்றனர். இதனைத் தமிழில் வேறுவகையில் குறிப்பிடுவதானால் எண்(8) இயல்கள் பகுக்கப்பட்டுள்ள…
வெருளி நோய்கள் 366-370 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 361-365 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 366-370 இறால் மீன்(shrimp) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறால் வெருளி.இறால் மீனைப் பார்த்தால் அல்லது சமைத்த இறாலைப் பார்த்தால் அல்லது இறால் மீனை உண்டால் பேரச்சம் வரும்.விலங்கு வெருளி(Zoophobia) உள்ளவர்களுக்கும் இப்பி வெருளி (Ostraconophobia) வருபவர்களுக்கும் இறால் வெருளி வர வாய்ப்புண்டு. 00 இறுதிச்சடங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இறுதிச்சடங்கு வெருளி.பிறரது இறுதிச்சடங்கைப்பார்க்கும் பொழுது அல்லது பிறரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொழுது துயரம் வருவதாலும் தனக்கோ தன் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ இறுதிச்சடங்கு…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 சூரியன் – சூர்ய செக்கு – செக்கு செம்பருத்தி – கெம்பத்தி செருப்பு – செர்ப்பு செவி – கிவி செவ்வரி – கெம்பரி செவ்வவரை – கொம்பவரே செவ்வாம்பல் – கெம்பாவல் செவ்வாழை – கெம்புபாளெ சேரி – கேரி சேலை – சேல சோளம் – (ஞ்)சோள சோளிகை – (ஞ்)சோளிகை தகரம் – தகர தகர் – தகர் தக்காளி தக்காளி தக்கோலம் – …
வெருளி நோய்கள் 361-365 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி) 361. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். எனவே, இக்குறைபாடுகள் நேரும்…
ஓணம் தமிழ்நாட்டு விழாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஓணம் தமிழ்நாட்டு விழாவே! நட்பு : பதிவு செய்த நாள் : 28/08/2012 மக்கள் விரும்பி – விழைந்து – கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் – பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது. இவ்வகையில், ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே இவ்விழா. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஓணம் கொண்டாடப்படுவதாகக் கேரள மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பத்துநாள் கொண்டாடப்படும் இவ்விழாவின் பத்தாம் நாளாகிய ஓணத்தன்று யானைகளைச் சிறப்பாக…
வெருளி நோய்கள் 356 – 360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 356 – 360 இழிவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இழிவு வெருளி.இழிவு படுத்தப்படுதல், அவமானத்திற்கு உள்ளாதல், தாழ்வுபடுத்தல், மதிப்பிழக்கச் செய்தல்(humiliation) போன்ற சூழல்களில் ஏற்படும் அளவு கடந்த பேரச்சத்தையும் இது குறிக்கிறது.இழிவு படுத்துதல் முதலியவற்றை நால்வகையாகப் பிரிக்கின்றனர். தெரிந்தவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல் தெரிந்தவரில் தவறு செய்யாதவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்யாதவை இழிவு படுத்தல் என…
வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 346-350 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 351 – 355 இலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலை வெருளி.சில இலைகள் கீரைகளாக உணவிற்குப் பயன்படுகின்றன. சில இலைகள் மருந்தாக மூலிகைகளாகப் பயன்படுகின்றன. சில இலைகள் அழகாகக் காட்சி யளிக்கின்றன. ஆனால், இலைகளின் தோற்றம், பயன்பற்றிய எண்ணம் எதுவுமில்லாமல் காரணமின்றி இலைகள் மீது அச்சம் கொள்வோர் உள்ளனர்.00 இலையுதிர் காலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் இலையுதிர் கால வெருளி.கோடைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையில் இலையுதிர்காலம் வருகிறது. இக்காலத்தில் இலைகள் பழுப்பு மஞ்சள் நிறமடைந்து உதிர்வதால் குப்பைகளாக…
சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் – ஆவணி 22, 2056 / 07.09.2025 ஞாயிறு காலை 10.00
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 22, 2056 / 07.09.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் உரையாளர்கள் : தயால் சிங்கு மாலைக் கல்லூரி, புது தில்லி மாணாக்கர்கள் செல்வி சி. சிரீ தர்சினி…
வெருளி நோய்கள் 346 – 350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 341 – 345 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 346 – 350 346 இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/ இருள் வெருளி/ இரா வெருளி என அழைக்கப்பெறுகின்றது. எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதான். எனவே நாம் இருள் வெருளி என்றே அழைப்போம்.இரவில் வெளியே செல்லுதல், இரவில் தனியாகப் படுத்தல், இரவுப்பொழுதில் யாரேனும் வருதல் அல்லது யாரையாவது பார்த்தல், இருட்டுச் சூழல் என இவர்கள் பேரச்சம் கொள்வர்.Nyctohylo…
வெருளி நோய்கள் 341 – 345 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 336 – 340 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 341 – 345 341. இருப்பு இயக்க வெருளி – Fysikophobia இருப்பு இயக்கம்(physical plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருப்பு இயக்க வெருளி. 00 342. இருப்புப்பாதை கடப்பு வெருளி – Bahnubophobia இருப்புப்பாதை கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருப்புப்பாதை கடப்பு வெருளி. கடப்புவெருளி(Agyrophobia/ Dromophobia/ Banmaxianphobia) உள்ளவர்களுக்கும் தொடரி வெருளி(Siderodromophobia) உள்ளவர்களுக்கும் இவ்வெருளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்புப்பாதையைக் கடப்பது சடடப்படியும் தவறு. நமக்குக் கேடு…