மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில்  தமிழ்நாடு மலர்ந்து மணம்   வீச    வீறுமிகு  பிரபாகர் தலைமைதனை   ஏற்று  வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில்  நிற்பர் /      வையகத்தில்  தமிழ்வீரம்  வான்கதிரே  ஒக்கும் மாழவுமே  வைத்தரச  பச்சையென்பான் ஈழ     மண்ணைவிட்டே  மறைந்தொழிவான்  மனம்மகிழ  மக்கள் வாழவந்த  சிங்களத்தை  வசைகூறி   என்றும்     வையகமே  தூற்றிநிற்கும்  வன்கொலைஞர்  என்றே ! 2. கொலைகார  அரசபச்சே  கொற்றமுமே  ஏறின்     கொற்றவறம்  அன்னவனைக்  குப்புறவே  வீழ்த்தும் மலையொக்கும்  பண்பாட்டில்  மலர்ந்து  மணம்  வீசும்    …

மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

மாவீரர்களுக்கு வீர வணக்கம்! தாயகக் கனவிற்காகத் தம்முயிர் நீத்தவர்களைத் தாய் மண்போற்றுபவர்கள் மறக்கக் கூடாது. மாவீரர்கள் மடிந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு உயிர்ப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து உயர் கடமையாற்றத் தவறக்கூடாது. நேற்றைக்கு அழிக்கப்பட்ட கனவுகளை மறக்காமல் நாளை நனவாக்க இன்றைக்கு உழைக்காமல் இருக்கக் கூடாது. மாவீரர் நாளில்  உலகெங்கும் மொழி இன நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும் தமிழீழ மாவீரர்களுக்கும் வீர வணக்கம்.  அகரமுதல – மின்னிதழ்

இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன்

இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது. இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும்…

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! –  தோழர் தியாகு

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி  வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று.  ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து…

திலீபன் சாகவில்லை!  – யோ புரட்சி

திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென‌ தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…

இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! – யாழ்ப்பாவாணன்

இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! இணைய வழித் தொடர்புகள் அடிக்கடி வந்து சேரும் அதில் வந்துள்ள மடல்களில் தன்னைக் கட்டு, தன் பிள்ளையைக் கட்டு, அழகான அக்காவைக் கட்டு, தங்கச்சியைக் கட்டு என்றவாறு விண்ணப்பங்கள் பல… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்! மனைவிக்கும் இவற்றைக் காட்டி கதைத்துச் சிரித்து மகிழ்வேன்… இணையத்தில் இப்படிப் பல உங்களுக்கும் வந்து சேரும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்… அப்பிள் திறன்பேசி, அப்பிள் மடிக்கணினி அனுப்புவதாக ஒருத்தி கனடா விமான ஓட்டியாம் மனைவியும் உடன்பட்டாள் நானும் அனுப்பு…

இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல், 30.06.2022

இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல் 59 ஆனி 16, 2053 / 30.06.2022 இரவு 7.00 இருட்டில் இலங்கை அடையாள எண் 864 136 8094 புகு எண் 12345 பேசுநர் தோழர் தியாகு தோழர் செந்தில்

நம்பிக்கையுடன் எழு! :  கி.பி. அரவிந்தன்

நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு…

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் நிறைவு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 23 – நிறைவு திறனாய்வு (தொடர்ச்சி) இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின்…

ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 22 திறனாய்வு 4 தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லாராலும் அஃது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம். நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர்…