காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’: பன்னாட்டுக் கருத்தரங்கு
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில் இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார். கம்பன் பிறந்த நாளை…
தமிழினப் படுகொலையும் ஐ.நா.வின் அணுகுமுறையும் – கருத்தரங்கம், சென்னை
தை 09, 2048 ஞாயிறு சனவரி 22, 2017 மாலை 3.00
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7 “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7 “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 5/7 “சி.இலக்குவனாரின் பழந்தமிழ் இயல்புகள்” குறித்துத் தொகுப்புரையை அளித்துள்ளார் முனைவர் வெ.சஞ்சீவராயன்; பதினொரு தலைப்புகளில் பழந்தமிழைப் பாங்குடன் ஆய்ந்தவற்றை விளக்கி அவற்றின் சுருக்கத்தைத் தந்துள்ளார்; இலக்குவனாரைப் பொருத்தவரையில் பழந்தமிழ் என்பது தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட நெடியதொரு காலத்தில் வழங்கிய தூய்மையான தமிழாகும் என்றும் விளக்குகிறார். …
சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை
சித்தர் இலக்கிய மையம் து. கோ. வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறை சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம் மார்கழி 15, 2047 வெள்ளிக்கிழமை 30-12-2016 காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 வரை துவாரகாதாசு கோவர்தன்தாசு வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை (DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106) அன்புடன் முனைவர் அரங்க. இராமலிங்கம் பேராசிரியர் & தலைவர் (பணி நிறைவு) சென்னைப் பல்கலைக்கழகம் கோகுல் அடுக்ககம் (ஞ்)சி 4 146, அவ்வை சண்முகம் சாலை இராயப்பேட்டை, சென்னை – 600 014 பேசி – 94448 46576
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463) இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6 ‘கல்வி’ க்கான விளக்கம் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 அருங்கேடும் கேடறியாமையும் நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7 தொல்காப்பியம் முழுமைக்கும் தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்” கட்டுரை மூலம்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7 “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்; தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6 பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே! பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம்…
