மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும மும்மதி…
வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்
வேண்டா வரன் கொடை! பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள் தான்விரும்பி ! – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும் போன கதை ! ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை ! மேனியில்தீ தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை ! தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும்…
தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் தனிமங்கள்(Chemical Elements) அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும். இயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. …
நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! . இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டு போகும் ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே…
நான்! – அகரம் அமுதன்
நான்! துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன்! கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன்! வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன்! பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன்? –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்! அகரம் அமுதன் http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html
மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார்…
மாற்றுத் திறனாளிகளைக் காப்போம் – தி.வே. விசயலட்சுமி
மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்! உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர். கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார். பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர் ஆடம் என்ற அமெரிக்க…
இலை அறிவியல் (science of leaf )-இலக்குவனார் திருவள்ளுவன்
இலை அறிவியல் (science of leaf ) காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில்…
மூ மா(Dinosaur) – இலக்குவனார் திருவள்ளுவன்
மூ மா(Dinosaur) ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த – அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை – ஊர்வனவற்றை மூ ஊரி – மூவூரி…
வேண்டாமே இந்தப் ப(பு)கை! – அகரம்.அமுதா
வேண்டாமே இந்தப் ப(பு)கை! நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப் புகைக்கிடங் காதல் புதிர்! வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை நம்புகையில் வீழும் நலம்! நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல் தகையில்லை வேண்டும் தடை! காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும் கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்! புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர் பகையில் புகையே பகை! சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின் பொறியைந்தும் பாழாம் புரி! பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும் புற்றுவைக்கும் வேண்டாம் புகை! …
தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்
இராபர்ட்டு கால்டுவெல் முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம், காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர். சித்திரை 26, 1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில் பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார். பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன்…
துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! – கவிஞர் சீவா பாரதி
துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன்! – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா? – இல்லை நான்கற்ற முறையாகுமா? காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…
