வந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்

– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.   எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…

திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா

  பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…

இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம்

மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு-பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் (Bureau of Indian Standard) ஒழிவிடமாக உள்ள  “ஆ” நிலை அறிவியலாளர் (“B” Grade Scientists)பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் மொத்த  ஒழிவிடங்கள்: 115 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  இயந்திரவியல் – 31,  மின்னியல் – 31,  பொதுப்பொயியியல்(Civil) – 24,மாழைப்பொறியியல் (Metallurgical) – 09,  வேதியல் – 08,  கணிணியறிவியல் – 10,  நெசவியல் – 02….

அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்

  மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப்  புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS)  ஒழிவிடமாக உள்ள “ஆ”, “இ” பிரிவு (குரூப் “பி” மற்றும் “சி” ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து  16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் வரம்பு பணிகளுக்கேற்ப 25 முதல் 40 வரை உள்ளன.   இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 31.12.2013 விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்:…

தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்தவர்களுக்குக் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

மொத்த  ஒழிவிடங்கள்: 402 அகவை வரம்பு : 30-11-2013  நாளன்று 35க்குள் இருக்க வேண்டும். . கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய  பிரிவில்  தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்து தேசியப் பயிற்சிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 14000 நேர்முகத் தேர்வு,   செயல்முறைத் தேர்வு நடைபெறும்  நாள்: 16.12.2013 – 21.12.2013 வரை. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cochinshipyard.com <http://www.cochinshipyard.com> என்ற இணையத்தளத்தின் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி(ஆன்லைனில்) விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 15.12.2013

பாரத மின்நிறுவனத்தில்(BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்

மொத்த  ஒழிவிடங்கள்:   38 அகவை வரம்பு 33 இற்குள் கல்வித்தகுதி பொறியாளர் பணி (15 இடங்கள்):  பொறியியல் துறையில் ஏதாவதொருபிரிவில் பட்டம்( B.E/ B.Tech) முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.43,550 மேற்பார்வையாளர் பணி(23 இடங்கள்):  60 %மதிப்பெண்களுடன் பட்டயம்  முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.21,690 இணைய வழி (ஆன்லைனில்) விண்ணப்பம் தொடங்கும் நாள் : 30.11.2013 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 21.12.2013 அச்சுப்படி அஞ்சலில் சென்று சேரக் கடைசி  நாள்: 28.12.2013 முழு  விவரங்கள் அறிய www.bhel.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

இந்தியப் பொறியியல் பணிக்கு (I.E.S.) விண்ணப்பிக்கலாம்.

இந்திய ஆட்சிப்பணி போன்று சிறப்பான பணி இந்தியப்  பொறியியல் பணி. இவ்வாண்டில் இப் பணியில் 763 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை  மத்தியத் தேர்வாணையம்(யு.பி.எசு.சி.) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 25ஆம்  நாளுக்குள் ம.ப.தே.ஆ. இணையதளத்தில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, பாடத்திட்டம்  முதலான அனைத்து விவரங்களையும் இந்த இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  இப்போது பொறியியல்(பி.இ., பி.டெக்.) இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதனை எழுதலாம். இப்பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடக்கத்திலேயே  மாதச்சம்பளம் உரூ.60 ஆயிரம்கிட்டும்.  முதன்மைத்தேர்வு மட்டும்தான் உண்டு. . முதல் பகுதியில் பொது…

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன

 நவம்பர் 20, 2013 முதல் 04-12-2013 வரை இணையத்தில் இதற்கென விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அச்சுப் பதிவை 09-12-2013க்குள் அனுப்ப வேண்டும். அகவை வரம்பு 31-10-2013 அன்று பட்டதாரிகள் 24. முதுநிலைப் பட்டதாரிகள் 26. பொறியியல் உட்பட ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் உரூ.300. http://career.tmb.in/ என்ற முகவரியில் இயங்கும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். பின்னர், அதனை அச்செடுத்து, அகவை, கல்வித் தகுதிக்கான சான்றிட்ட படிகள், கட்டணத்திற்கான  வரைவோலை(டி.டி.)…

வேலை வாய்ப்புகள்

இளநிலை அறிவியல் அலுவலர், பயிற்சி அலுவலர், உதவிப்பதிவாளர், மேற்பார்வையர் முதலான 84 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மத்தியப்  பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 28.11.2013 முழு விவரங்களுக்கு