காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225   201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து                 கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி)   அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு,                 “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12) “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய்! காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி)   இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 108   கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி)   உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 9 ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும் வினவத் தொடங்கினள் வீணே வருந்திக் காரணம் பலசொலிக் கழித்தன ராயினும் மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8 “ஆடலனென்ற ஆடவனைத் தினமும் வந்து வினவக் காரணம் யாதோ? என்ன முறையினன்; என்றும் வினவுவாய் வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்” அன்பனைக் காணா அவ்வெழி லரசி அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென் றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை உள்ளில்…

கலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook

   20:அடுமகள் -female cook ; அடுமகன் -male cook     அடு என்பதன் அடிப்படையில் சமையல் செய்யும் பெண் அடுமகள் எனப்படுகின்றாள். அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் – புறநானூறு399.1 நாம் இப்பொழுது female cook—சமைப்பவள்/பெண்சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகள் என்றே குறிக்கலாம். male cook-சமைப்பவன், ஆண் சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகன் என்றே குறிக்கலாம். அடுமகள் -female cook அடுமகன் -male cook – இலக்குவனார் திருவள்ளுவன்

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 27 – 49

   (சித்திரை 28,2045 / 11 மே 2014   தொடர்ச்சி)   27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் – சிலப்பதிகாரம், பதிகம் 10   28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37- 29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி  – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38   30. ஆடல் பாடல் இசையே தமிழே  – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 45 31. நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல்…