தனிப்பெருமை பெண்மையே! – ஆற்காடு.க.குமரன்

தனிப்பெருமை பெண்மையே! தன்முகம் மறந்து பன்முகம்   உள்ளும் வெளியும் உலகையாளும்   இல்லையேல் இல்லை வயிற்றுக்குள் வைத்துவுயிர்ப்பிக்கத் தன்னுயிரை தனிவுயிராய்த் தரணிக்களித்த தாரகை!   முத்துக்குள் சிப்பி வைரத்துக்குள் மண் பிறக்கும் முன்னே உறவாடும் உலகில் ஒரே உயிர்!   அகத்தில் வைத்து முகம் பார்க்கும் அழகி!   உறவுகளை உயிர்ப்பித்து உலகை உருவாக்கும் உயிர்!   ஒருமையைப் பன்மையாக்கும் தனித்தன்மை தனிப்பெருமை பெண்மையே!   இவண் ஆற்காடு.க.குமரன் – 9789814114  

எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! – ஆற்காடு.க.குமரன்

எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! ஆட்சியாளர்கள் தவறாமல் ஐந்தாண்டு படிப்பிக்கும் ஆட்சிப் பாடத்தையே புரிந்து கொள்ளாமல் தேர்தல் தேர்வில் தோல்வியடையும் வாக்காளர்கள்! வெற்றி தோல்வியை வரையறுக்கும் வேடிக்கைத் தேர்வு முறை!  தேர்வெழுதுங்கள்! தோல்விப் பயமின்றி  முதுமையடைந்தும் முடிவெடுக்கத் திணறும் மூடர் கூட்டமதில் முளைவிடும் தளிர்களே முடிந்த வரை முயலுங்கள்! வினாத்தாள் வினாக்களோடு விடைத்தாள் வெறுமையாய் உங்களுக்காக… மனத்தில் உள்ளதை எழுதாதீர்கள் பட்டறிவைப் பதிக்கத் தோன்றும் தேர்வு ஒரு பட்டறிவே பட்டறிவிற்கே   பட்டறிவா? மதியில் பதிந்ததை எழுதுங்கள் புதிய பாதை புலப்படும்! எல்லா வினாக்களுக்கும் விடையளியுங்கள் சரியா…

வான் நிலவே என்னவளும்!-ஆற்காடு.க.குமரன்

குளத்து நீரில் குளிப்பதால் வெண்ணிலவு….. பசலையில் மெலிவதால் பிறை நிலவு……. கூடலில் முழுதாகி வெள்ளுவா…… வானக் கூடாரத்தில் மறைந்து நட்சத்திரப் பிள்ளைகளைப் பெறுகையில் காருவா………. நிலவே என்னவள் நிலவே. இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114  

மூச்சுக் காற்றாய் என் தமிழ்! – ஆற்காடு க.குமரன்

மூச்சுக் காற்றாய் என் தமிழ்!  தாயின்றி எவனுமில்லை  தாய் மொழியின்றி ஏதுமில்லை வளைந்து நெளிந்து குழைந்து மூக்கோடு பேசும் மூச்சுக் காற்றாய் என் தமிழ் பெருமூச்சு நெடில் சிறு மூச்சு குறில் மருத்துவமும் கண்டது மகத்துவமும் கொண்டது  என் தமிழ் அரை மாத்திரை கால் மாத்திரை  முழு மாத்திரை இலக்கணத்தோடு இனியதமிழ் தமிழ் ஒன்றே நாவை நடமாடச் செய்யும் அயல் மொழிகள் நுனி  நாக்கோடு எச்சில் போல் சிதறும் பேசிப்பார் அஃதுனக்குப் புரியும் தாய்ப்பாலும் கள்ளிப்பாலும் வெண்மைதான் பருகிப்பார் புரியும் உண்மைதான் உயிரும் மெய்யும்…

தாய்மொழிச் சொற்களைப் பயன்படுத்தாதீர்! – இரகீம் பொன்னாடு

[ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும் ஒரு பொது மொழி வேண்டுமென்றும், அந்தப் பொது மொழியாக இருக்கத் தகுந்தது இந்தியே என்றும் 14.09.2019, 2019 அன்று அறிவித்தார். நாடுமுழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, வடக்கு கேரளா,மலப்புரத்தைச் சார்ந்த  கவிஞர், பேராசிரியர் இரகீம் பொன்னாடு எழுதிய இக்கவிதை. மொழித்தடை என்ற பெயரில அவர் எழுதியதை, ‘தாய்மொழிச்சொற்களைப் பயன்பாடுத்தாதீர்’ என்னும் தலைப்பில் நான்  மொழிபெயர்த்து அளிக்கின்றேன். இந்தியப் பண்பாட்டு அவையத் தளத்தில்  indianculturalforum.in  மலையாளக் கவிதையுடன், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிபெயர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘விடுதலை’…

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்

நான் என்பது  செருக்கல்ல; எனது நம்பிக்கை!   வானந் தொடுந் தூரம் அது நாளும் வசமாகும், பாடல் அது போதும் உடல் யாவும் உரமேறும்;   பாதம் அது நோகும் பாதை மிக நீளும், காலம் ஒரு கீற்றாய்க் காற்றில் நமைப் பேசும்;   கானல் எனும் நீராய் உள் ளாசை வனப்பூறும், மூளும் நெருப் பாளும் நிலமெல்லாம் நமதாகும்;   கனவே கொடை யாகும் கடுகளவும் மலை யாகும், முயன்றால் உனதாகும் உழைப்பால் அது பலவாகும்;   நேசம் முதலாகும்’நொடி தேசம் உனதாகும், அன்பில்…

நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! – துரைவசந்தராசன்

நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! நூல்பிடித்தாற் போல்நடத்தும் வாழ்க்கை ! நெஞ்சில் நெருப்புக்கும் சூடளிக்கும் நேர்மை !பேசும் நூல்நிலையம் !பல்கலையின் கழகம்! என்றும் நுரைத்தாலும் நிறுத்தாத உழைப்பு !அன்பால் பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை ! கேட்டுப் பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு ! பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் ! எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் ! எதிர்ப்பஞ்சாப் போர்வீரர் !போராட் டத்தில் துளிர்ப்பதுதான் வாழ்வென்ற கொள்கைக் குன்று ! துளியேனும் நெளியாத நெம்பு கோலர் ! வளிபரப்பை வியர்வையினால் நிரப்பி…

தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! – துரை வசந்தராசன்

தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! தமிழ்வாழ்க என்றுவெறும் கூச்சல் போட்டால்தமிழ்வாழ்ந்து விடுவதில்லை !உதட்ட சைந்துஅமிழ்தென்று சொல்லுவதால் மட்டும் யார்க்கும்அங்கங்கள் நிறைவதில்லை !இயங்க வேண்டும் ! தமிழில்தான் திருமணங்கள், வடவர் தம்மைத்தள்ளிவைத்தே மனைவிழாக்கள் எல்லாம் செய்துதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் !தமிழாக வாழ்ந்தாலே உயரம் கூடும் ! உத்திரத்தை ஒட்டடைகள் தாங்குமென்றுஒருபோதும் அறிவுள்ளோர் ஏற்ப தில்லை !சித்திரத்து விளக்கொளிதான் பகலே என்றுசிந்திக்க எவர்க்கேனும் துணிவு மில்லை !நத்தைகள் நீர்சுமந்தே அணைநி ரப்பநம்பிக்கை கொண்டெவரும் முயல்வ தில்லை !முத்தமிழை வளர்க்கின்ற முயற்சி யில்நாம்மூங்கைகளாய் முடங்கிவிட்டோம் !மறுப்பும்…

தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!

தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!   சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா          (பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்               (பாரதியார் கவிதைகள் : தேசியகீதம், தமிழ்: 1) சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!              (தேசிய கீதங்கள், தமிழ்: 2) தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்      …

வாழ்க்கை வாழ்வதற்கே! – ஃபாத்திமா அமீது

வாழ்க்கை வாழ்வதற்கே!   துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்!   வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்!   சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்!   தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்!   மாற்றம்வரும்  மகிழ்ச்சி தரும்,  வழிகள்பல திறக்கும், வாழ்வோம் சிறப்போடு, வாழ்க்கை வாழ்வதற்கே!   காரைக்குடி ஃபாத்திமா அமீது  சார்சா.  தரவு: முதுவை இதாயத்து…

தமிழைப் போற்ற வாருங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் போற்ற வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி…