சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! “மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ” தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புறநானூறு 190 ஆவது பாடல் பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக்…
நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி) செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும் சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத்து என்னை பரிவு (நாலடியார் 110) பதவுரை: சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா; முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா; உறுகாலத்து=துன்புறுங்காலத்து, ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா ஆம் இடத்தே=ஆகும் காலத்தில் ஆகும்= நிகழும் சிறுகாலை=முற்காலத்து, பட்ட= உண்டாகிய, பொறியும்=நல்வினைகளும், அதனால்=ஆதலால், இறு…
செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே!- பரணர்: இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25 செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே! ”செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.” செய்யா=செய்யாதவற்றை, கிளத்தல்=பேசுதல், எய்யாதாகின்று=அறியாததாக ஆயிற்று, செய்யாததைச் செய்ததாகப் பாராட்டிக் கூறுதல் என் நா அறியாததாகும். அஃதாவது பொய்யாகப் புகழ்தல் புலவருக்கு வழக்கமில்லை என்கிறார். நாமும் இதைப் பின்பற்றி ஒருவர் செய்யாததைச் செய்ததாகக் கூறிப் பாராட்டக் கூடாது. *** கண்டீரக் கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். நள்ளியிடம் சென்று புலவர்…
நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 17 புற அழகு அழகல்ல கல்வியே உண்மையான அழகு குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. (நாலடியார் 131) பதவுரை: குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல;…
நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! –தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 16 பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே! சினம் கூடாது எனச் சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், பதினெண்கீழ்க்கணக்குப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், சித்தர்கள், வள்ளலார் முதலிய அண்மைக்காலப்புலவர்கள், மேனாட்டறிஞர்கள் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர், “அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்“ என்கிறார். நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை, …
நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 15 கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்தவையகம் எல்லாம் பெறினும் உரையற்கபொய்யோ டிடைமிடைந்த சொல் (நாலடியார், பொறையுடைமை, 80) தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்; தக்கார் கேடு எண்ணற்க – அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே; தன்…
என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
என்றும் இணைந்து வாழ்வோம்! (“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.) உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர் என்று சேர்ந்து வாழ்வோம் – நாம் என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த வீடும், நாடும் கடந்த உலகம் ஒன்று என்று வாழ்வோம் – நாம் ஒன்று பட்டு வாழ்வோம்! நிறமென்ன உருவென்ன பிறப்பென்ன தொழிலென்ன எல்லாம் ஒன்று என்போம் எல்லாம் ஒன்று என்போம்! பகையில்லை போரில்லை இழிவில்லை தாழ்வில்லை என்று இணைந்து வாழ்வோம் – இனி என்றும் இணைந்து…
எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்
எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும். எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே! எழுதுக எழுதுக தமிழில் எதையுமே! பேசுக பேசுக நல்ல தமிழிலே! பயிலுக பயிலுக நமது தமிழிலே! மொழியை மறந்தாலோ வாழ்வை இழப்போமே! வாழ்வை இழந்தாலோ நாமும் இல்லையே! நம்…
தமிழை வாழ்த்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழை வாழ்த்துவோம்! “Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள். காலை எழுந்ததும் பாடம் படிப்போம் மாலை முழுவதும் ஆடிக் களிப்போம் விளையாடிக் களிப்போம் பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்! பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க் கலையை வளர்ப்போம்! கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்! பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க் கூடி…
கைகள் இரண்டு ஊருக்குதவ – இலக்குவனார் திருவள்ளுவன்
கைகள் இரண்டு ஊருக்குதவ குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கைகள் இரண்டு ஊருக்குதவ கால்கள் இரண்டு நல்வழி நடக்க கண்கள் இரண்டு கனிவாய்க் காண செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச்…
மழை வீழட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மழை வீழட்டும்! 1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும். வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை வீழட்டும் வீழட்டும் – பாரில் வேண்டிய மட்டும் வீழட்டும்! மழை எங்கெங்கும் வீழட்டும்! நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ் வாழட்டும்! வாழட்டும்! – பாரில் நீயும்…
தூய்மையே செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்
தூய்மையே செல்வம் மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும் என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன. வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை. மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சுற்றுப்புறத்…
