வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்
இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!
தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்
கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே) நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல நாகரி கத்துணை நம்தமி ழாகும் வாளுக்குக் கூர்மையைப் போல — அது வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே) இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ் இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும் அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ் ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே) அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ் அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம் மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர் மேல்வைத்த…
தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன்
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும். இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள் தமிழ் உயர்வென்று…
தமிழ் வெல்க வெல்க
இனிமைத் தமிழ்மொழி எமது — எமக் கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு — எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை — எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! நனி்யுண்டு நனியுண்டு காதல் — தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில் (இனிமைத்) தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம்…
வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்ம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய் இந்நாள் செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன் பெருமை! வயிற்றுக்கு ஊற்றக் கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ! இளந்தமிழா குறைதவிர்க்க…
நாம் தமிழர் என்று பாடு
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு! போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில் போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு. நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு? தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம் தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு! மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய் முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு! நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து நாம்தமிழர்…
பாரதிதாசனின் சங்கநாதம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென்று ஊது சங்கே! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!…
மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து
நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965 ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித்…
பழி வராமல் படி – பாவலர் வையவன்
ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…
செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்
1. செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி! தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ! வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ! தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்! தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்! அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம் யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே? 2. தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித் தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக் கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்…
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!
– தமிழ்ப் புரவலர் தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே! (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…
மனக்கதவும் திறவாதோ!
-மதுரை க. பாண்டியன் படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே, பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்! இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே, இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்! விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே. வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக! நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்! இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே, இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்! இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்! மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி…
