பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 31 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
( ஆனி 13, 2046 / சூன் 28, 2015 தொடர்ச்சி) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 30 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 30 அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : பள்ளியறை நிலைமை : (பள்ளிகொள்ள வருகின்ற பூங்குயிலை துள்ளி மெல்ல அணைக்கின்றான்) பூங் : என்ன நீர் இன்று பொழுதுக்குள்ளே களைப்பாய் உள்ளீர் உழைத்ததனாலா? அரு : என்னடி! உண்ணல் உறக்கம் தவிர்த்தோர் தவிர வேறென்ன வேண்டும்? உழைப்பு நமக்கு! பூங் : வெல்வெட்டு மெத்தை பிரித்தே வைத்த மேல் விரிப்பட்டும் தொங்கவே செய்த நல்லதோர் தேக்கங்கட்டிலும் உண்டு! நல்மணம் பரப்பும் பொருள்களும் உண்டு பாலாடையாகப் படி நிறை…
பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 29 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 29 அங்கம் : ஆண்சிட்டு, பெண்சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (ஊடல் கூடல்) (சிட்டுகள் சின்ன சிரிப்பாலே சிறகால் அடித்து முகம் மலர்ந்து மெட்டுகள் போட்டு கீச் சீச் பண்பாடி ஆட்டம் போட்டுவிட) (கவிஞரும் அன்பும் கண்டதனைக் கண்களால் சிமிட்டிப் பேசியபின் புவியைப் பார்த்து மேல் நோக்கி புன்னகை வீசிய பொழுதினிலே) (காட்சி முடிவு) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம் : அன்பரசன், கவிஞர் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி : பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் : பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி : …
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 27 அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண் : பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங் : முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண் : ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி) காட்சி – 26 அங்கம் : கவிஞர், அன்பரசன் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (நகையைக் கண்டு நகைத்த கவிஞர் நகைக்கோர் வழியை உரைக்கின்றார்) கவி : தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன் பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில் குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன் அன் : இந்நிலை எதனால் புலவீர்? விந்தையுமன்றோ? கேட்க! கவி : போர்முனை அறியா ஒருவர்! இங்கே! இராணுவ…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண் : பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண் : கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண் : மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண் …
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 24 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி – 24 அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும் தப்பாது வாங்கி இல்லம் வருதல்) அரு : கொடியே! நீ! வருக! கோவில் நாம் செல்வோம் நொடியும் இனி இல்லை புரிவாய்! நீ கண்ணே! பூங் : வாடா மலர்ப் பட்டோ! காஞ்சி செம்பட்டோ! தேடி நான் கட்டி வருகிறேன் அத்தான்! அரு : வீடே ஒரு கடையாய் இருந்ததும்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண் : என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண் : பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண் : எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் : வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண் …
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம் : கவிஞர், அன்பரசன் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் : கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி : இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 21 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) காட்சி – 21 (நாடகக்காட்சி – 7) அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில் அன்புக் கணவனை ஐயம் கொள்ள திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே) அரு : பொழிபிறை நனி நெற்றி! தோழி! எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி! வழிகின்ற குழல் அருவி! தோழி! பொழிகின்ற வாய் அமுதம்! தோழி! விழி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி) காட்சி – 20 அங்கம் : அன்பரசன், கவிஞர் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை :(நாடகக் காட்சி முடிவுபெற “காணோமே எனது பெண்ணைத்தான்” கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப : மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி : விழி நீர் சொட்டக் கண்டதனை விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!…