பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி மறைவு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84. சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில் மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை…
விண்தொலைக்காட்சியில் சமற்கிருத வாரம் – கலந்துரையாடல்
“நான் முகவரி அற்றவளா?” – புத்தகம் வெளியீட்டு விழா
நான் முகவரி அற்றவளா? …. அன்று நடைபெற்றது. செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கின. புத்தகவெளியீட்டை வைகோ, காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளியிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி, இளங்கோவன் ஆகியோருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார். மாளவிகாவின் தந்தை மருத்துவர் சிவகணேசன் வைகோவிற்குப் பொன்னாடை அணிவித்தார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் புத்தக ஆய்வுரை ஆற்றினார். வைகோ வின் சிறப்புரைக்குப்பின் ஓவியர் சந்தானம் உரையாற்றினார். அருணகிரி நன்றி நவின்றார்.
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்
– அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு – வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர்…
தொடரித்துறையில் வேலைவாய்ப்பு – எழுச்சிப் பேரணி
ஒருங்கிணைந்த தொடர்வண்டிப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி தமிழர் எழுச்சி இயக்கம் நடத்திய கோட்டை நோக்கி மாபெரும் பேரணி! ஒருங்கிணைந்தரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித்துறையில் பயிற்சி முடித்த 5000 தமிழர்களுக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும், ஐ.சி.எப் மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறை வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நேற்றுஎழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலில் தொடடங்கி கோட்டைநோக்கிப்பேரணி நடைபெற்றது. பேரணியைத்தமிழர் எழுச்சி…
ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா
நன்னன் குடி நடத்திய நூல்கள் வெளியீட்டுடன் கூடிய ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா 2014 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் பக்கல் அன்று புலவர்.நன்னன் எழுதிய8 நூல்கள் வெளியீடும் மாணவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கும்பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது. நன்னன்குடிகடந்த11 ஆண்டுகளாகத் தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்குக் கம்பன் கழகத் தலைவரும்எம் சி ஆர் கழகத்தலைவருமாகிய இராம.வீரப்பன் தலைமைத் தாங்கி நூல்களைவெளியிட்டு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். புலவர் நன்னன் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் விழாவின் நோக்கங்களைப் பற்றி…
74 ஆவது திங்கள் பாவரங்கம்
ஆடி 12, 2045 / 28.07.2014 புதுச்சேரி மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் 74 ஆவது திங்கள் பாவரங்கம் மரபுப் பா,புதுப் பா, துளிப்பா, மொழிபெயர்ப்புப் பா, சிறார் பா பாவரங்கம் மற்றும் கழக இலக்கியம் அறிமுகம் நடைபெற்றது. கலந்துகொண்டோர்: பாவலர் ஆலா, மஞ்சக்கல் உபேந்திரன், பைரவி, சோ.கு,செந்தில்குமரன், பரிதியன்பன், சி. வெற்றிவேந்தன், கதிர். முத்துரத்தினம், இரமேசு, அரச.மணிமாறன், உரு.அசோகன், இராச.முருகையன், தி.சி.செம்மல், கு.அ. அறிவாளன், கு.அ. தமிழ்மொழி, பெ.குமாரி மற்றும் புதுவைத் தமிழ்நெஞ்சன் தீர்மானம்: தமிழ்வழிக் கல்வியை மறுக்கும், இந்தி சமற்கிருதத்தைத் திணிக்கும், நடுவண்…
‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல் அறிமுக விழா, புதுச்சேரி
புதுச்சேரியில் நூல்அறிமுக விழா – அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவி வழங்கும் விழா ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்அறிமுக விழாவும் அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் ஆடி 15, 2045 /31. 07. 2014 மாலை 6 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி செயராம் உறைவகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் தலைமை தாங்கி ‘ஒரு சாமானியனின் சாதனை’ என்ற நூலை வெளியிட்டு வாழ்த்திப்…
மனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு
[கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.] அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த மடல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா இன்று (ஆடி 11 2045, சூலை 27,2014) நடைபெற்றது. இவ்விழாவில், “அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், மடல் எழுதுகிற ஒரு மன…
வினைதீர்த்தான் நடத்திய தன்முனைப்புப் பயிலரங்கம்
சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது. கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். [ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல் 2. பொருளாளர் திரு திருஞானம் , செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன்…
நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்
நெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள், பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….
இத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்!
இத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….
