பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்
பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14) சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது. தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது.
சென்னை ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்– அமைச்சர் செயலலிதா, பிப்.21,2014 வெள்ளியன்று திறந்து வைத்தார். பன்னோக்கு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன. வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லாத புதிய மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன. தனியார் உயர்நிலை மருத்துவமனைகளுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. மூளை, இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அறுவை மருத்துவம் இல்லாமல் சரி செய்து பண்டுவம் அளிக்கஉரூ.5 கோடி மதிப்புள்ள இரத்த நாள அடைப்புநீக்குக் கருவி வாங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு…
செய்திக் குறிப்புகள் சில
அமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச் சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9 அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள கழிமிகு விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். மது ஒழிப்புக்கு ஆதரவாகப் போராட மாணவர்கள் முன்வர வேண்டும் – தமிழருவி மணியன் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு …
தென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க.
திமுக 10- ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: சேதுக்கால்வாய் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும். கச்சத்தீவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு எதிர் ஆவணம் கண்டனத்துக்கு உரியது. ஈழத் தமிழர் வருகின்ற மார்ச்சு மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா….
(உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா
கிகாலி : (உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல் நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகைச்சுவை நாடகம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. விழா நிறைவில் வாழை…
ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் – கருத்தரங்கம்
அன்புடையீர், வணக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக ‘ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில் நடைபெறும். கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும். 1. தமிழ் பின்னம் – பெயரிடல், வரிவடிவம் தொடர்பாக. 2. ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் – பயன்பாடு 3. ” ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு” – திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு 4. தமிழ் ’16- ஓர்மி(பிட்டு)’ அனைத்துரு எழுத்துரு…
மலேசிய அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவி விலகல்
கோலாலம்பூர்: மலேசியாவில் தலைமையாளர் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் பெர்சாத்துவான் இண்டுராப்பு மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்திபதவி விலகியுள்ளார். நாடாளுமன்ற மேலவைப் பதவி, துணை அமைச்சர் பதவி ஆகிய இரண்டிலும் இருந்து நேற்று வேதமூர்த்தி விலகியதாக அறியப்படுகிறது. ‘சியு டெய்லி’ என்னும் செய்தியமைப்பின் கூற்றுப்படி, வேதமூர்த்தி அவரதுதவிலகல் மடலைத் தலைமைளார் நசிப்பிடம் நேரடியாக 10.02.14 அன்று அளித்துள்ளார்..
வளைகுடா வானம்பாடி : திங்கள் சிறப்புக்கூட்டம்
குவைத் வளைகுடா வானம்பாடியின் திங்கள் சிறப்புக்கூட்டம் மங்கப் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் திரு.கா.சேது அவர்கள் தொடங்கி வைக்க திரு சுப்புராசு அவர்கள் தலைமை வகித்தார்கள். தாயகத்தில் இருந்து தமிழரின் சிறப்புகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் தொலைபேசி வழியே பல அரிய தகவல்களைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார். வழக்கம்போல் குவைத் கலைஞர்களின் பாடல்கள், கவிதைகள் என்று மேடையில் களைகட்டியது. மருத்துவர் திருமதி சுதந்திராதேவியின் மருத்துவ அறிவுரைப்பகுதி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. ‘தமிழ் சமூகத்தில் காதல்’ என்று நிலவனும், ‘தமிழர்களின் ஒற்றுமை’ என்று திரு…
தமிழக அரசின் வரிவிதிப்பில்லா மிகை வரவு நிதிநிலை அறிக்கை
திட்டச் செலவு 42 ஆயிரத்து 185 கோடி இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி அரசின் மதுவகை விற்பனை இலக்கு 2014-15 இல், (23 ஆயிரம் கோடி உரூபாயில் இருந்து)26 ஆயிரம் கோடி உரூபாயாக உயரும். தமிழக அரசின் 2013 – 2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை 13.02.14 அன்று சட்ட மன்றத்தில் தமிழகநிதியமைச்சர் பன்னீர்செல்வம் முன்வைத்தார். அவர் தெரிவித்த அறிவிப்புகள் சில:- . திட்டச் செலவினம் 170 ஆயிரம் கோடியை மிஞ்சும். ஊர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்திற்கு…
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மரு.இராமதாசு 10.02.14 திங்கள்கிழமையன்று வெளியிட்டார். தமிழகச் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை அளிக்கப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் கல்வி, தரமான கல்வி,மகிழ்வான சுமையற்ற கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்படும். * தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிற கல்விஇயக்கங்களின் பாடத்…
பேராசிரியர் பழ. கண்ணப்பன் மறைவு
பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்; வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில் கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர். பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி…
சிங்கள அரசு செய்தது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலையே: வைகோ
இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது….
