அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி
தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி? 1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம். 2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக! 4. கடைசி நாள் : 31.12.2013. 5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…
மன்மோகன் சிங்கு ஏமாற்றிவிட்டார் : கண்டுபிடித்த கலைஞரின் காட்டம்
இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டார் : கண்டுபிடித்த கலைஞரின் காட்டம் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள், இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டதாக, மன்மோகன்சிங்கிற்கு எதிரான காட்டமான அறிக்கை விட்டுள்ளார். இது தொடர்பிலான அவர் அறிக்கை வருமாறு:- கனடா, பிரிட்டன், மொரீசியசு, திரினிடாட்டு, ஆசுதிரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் பொதுவளஆய மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்புஇராசபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும்,…
இலங்கைப் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சிதம்பரம்
குற்றவாளியே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்! இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். மேலும், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையானஉசாவல் தேவை” என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது தெற்கு ஆசிய மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக உசாவல் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது”…
பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழா
தில்லி பிரகதித் திடலில் நடைபெற்றுவரும் இந்திய-பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புச் சார்பாளர் எசு.டி.கே. சக்கையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் முனைவர் மு.இராசாராம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் சசுபீர் சிங்கு பசாசு, துணை இயக்குநர் கு.தாணப்பா, செய்தி விளம்பரத் துறை உதவி இயக்குநர் முத்தையா முதலானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன….
நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி
தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டுத் தமிழர்களம், திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது. தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பொதுவளஆய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு-ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில்…
அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டி
ஏற்காடு (தனி) தொகுதிக்குப் புதிய சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த அக்டோபர் 4- இல் வெளியிடப்பட்டது. இதன்படி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுக (பெ.சரோசா), திமுக (வெ.மாறன்) வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் தேவை: த.ஈ.ஆ.அ (டெசோ)
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு உசாவல் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற,த.ஈ.ஆ.அ (டெசோ) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் நடைபெற்று வரும் பொதுவளஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலானஇவ்வமைப்பு அமைப்பு, மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. எனினும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப்படுகொலையை வெறும் போர்க்குற்றமாகவும் மனித உரிமை மீறல்களாகவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளது வருந்தத்தக்கது.
தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’
அன்புடையீர், வணக்கம். ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம். ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத வகையில் இந்த இல்லத்தை உடனடியாக நாம்…
பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!
மாணாக்கர் எழுச்சி! முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன் முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும் மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர் மாணாக்கர்கள். இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் இயக்குநர் கௌதமன் முதலான உணர்வாளர்கள் பலரும் தளையிடப்பட்டுள்ளனர். போராட்டங்கள் மேலும் பரவும் முன்னர் அரசு தலையிட்டு நல்ல முடிவு காணும் எனப் பொதுமக்கள்…
பரிவுகாட்டப்பட வேண்டியவர்களைப் பாழ்கிணற்றில் தள்ளலாமா?
சிறப்புமுகாம்வாசிகள் மடல் அனுப்புநர் : இலங்கைச் சிறைவாசிகள் இலங்கைச் சிறப்புச்சிறை மத்தியச் சிறை வளாகம் திருச்சி ஐயா வணக்கம். நாம் இந்த மக்களாட்சி நாட்டின் விருந்தாளிகள். எம்மீது ஐயத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுப், பிணையில் வெளியே வந்தவர்கள் . வழக்கை முடிக்காமல் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள் எனும் அடிப்படையில் வெளிநாட்டவர் தடுப்புச் சட்டம் 3[2]உ-ஐப் பயன் படுத்தி எம்மைச் சிறப்பு முகாம்களில் அடைக்கின்றீர்கள். எமது விடுதலைக்கு நீண்ட காலம் ஆகும் என்பதைக் கருத்திற் கொண்டு உச்சநீதி மன்றம், உயர் நீதி மன்றங்கள்…
மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ”தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார். விழாவில் பாலச்சந்திரன் இ.ஆ.ப. பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.
மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்
சென்னை : ”மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,” என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார். இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றுகளை வழங்கி, சசி…
