இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்

இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர்.  இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…

சமூக நீதிக்கான வீரமணி விருது

   சமூக நீதிக்கான வீரமணி விருதினை மராட்டிய மாநில பொதுப் பணி- சுற்றுலாத் துறை அமைச்சர் சகன் புசுபல் (Chhagan Bhujbal) அவர்களுக்கு,  மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் தமிழர் தலைவர் வீரமணி முன்னிலையில்வழங்கினார். உடன் பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் சோம இளங்கோவன், அன்பழகன் இ.ஆ.ப., சு. குமணராசன், இரவிச்சந்திரன், வீ.குமரேசன், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் (மும்பை – 11.1.2014).   விழாப்  பதாகையில் தமிழும் மராத்தியும்  இடம் பெற்றிருக்கலாமே! ஆங்கிலம் எதற்கு?

திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை

ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது.  தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை…

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம்,  மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…

கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதா? மத்திய அமைச்சர் வாசன் கடுஞ்சினம்!

சென்னை, தண்டையார்பேட்டை, துறைமுகக் குடியிருப்பில், முன்னாள் துணைத் தலைமையாளர் பாபு செகசீவன்இராம் சிலை திறப்பு விழா  சனவரி 12,2014 அன்று   நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்தியக் கப்பல் துறை அமைச்சர், வாசன், இந்தியச் சிறைகளில் உள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும்’ என, இலங்கை அமைச்சர் கூறியிருப்பது  நல்லிணக்கப் பேச்சிற்கு  உகந்ததல்ல என்றும்   கச்சத்தீவை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்  ஆர்ப்பரிப்புடன் கூறினார். ஆனால், மத்திய அரசு சிங்கள மீனவர்களை விடுவித்துள்ளது. கச்சத்தீவிலும் எதிரான நிலைப்பாடுதான் உள்ளது. வாசன் தனிக்கட்சிக்குப் பாதை வகுப்பதற்காக…

தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2045 (2014)

  கடந்த 25 ஆண்டுகளாகத், தமிழ் – தமிழர் உரிமைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” மாதமிருமுறை இதழ் சார்பில் வழக்கம்போல் ‘பொங்கல் சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்காகப் போராடும் பல்வேறு கட்சி, இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும்,  குமுகாயச் செயற்பாட்டாளர்களும் இயற்றியப் படைப்புகள்  முந்தைய ஆண்டுகள்போல், இம்மலரிலும் வெளியிடப்பட்டுள்ளன.   சென்னையில் நடைபெற்று வரும் 37ஆவது புத்தகக் காட்சியின், 234ஆவது அரங்கில் அமைந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அரங்கில், இதழ் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்…

கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.

தென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்:   அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் வங்கி) , தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் கடலோடி வங்கி (ஓவர்சீசு வங்கி), கீழ்த்திசை வணிக வங்கி(ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சு), பஞ்சாப்பு…

தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!

     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, பிற வங்கி  என்ற வேறுபாடின்றி ஒருவர் மொத்தமாக மாதம் ஐந்து தடவைக்குமேல் தானிப் பொறியைப் பயன்படுத்தினால் கட்டணம் பெற இந்திய வங்கிகள் சங்கம்,  சேம(ரிசர்வு) வங்கிக்குப் பரிந்துரைத்துள்ளது….

சேதுத்திட்டம்: தமிழக அரசின் செயல் ஏற்புடையதல்ல – வாசன்

சேதுக்கால்வாய்த்திட்டம்: தமிழக அரசின் வழக்காவண உறுதிமொழி ஏற்புடையதல்ல – மத்திய அமைச்சர் வாசன்  தூத்துக்குடி: “சேதுக்கால்வாய்த்திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் அளித்த  உறுதியுரை ஆவணம் சரியானதல்ல,” என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.  மேலும்,.  இது  நாட்டின்ம் தென்தமிழகத்திற்கும் ஊறு நேர்விக்கும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த  காலத்தாழ்ச்சியை ஏற்படுத்தும். என்றும் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

புதுச்சேரி, மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்

67 ஆவது திங்கள் பாவரங்கம் திருக்குறள் பெருமாள் ஐயா நூற்றாண்டு தொடக்க விழா 15-11-1914 – 15-11-2014 ஆகியன 30.12.2013  அன்று நடைபெற்றன. நிகழ்ச்சியில் மரபுப் பா, கழக இலக்கிய அறிமுகம், புதுப் பா, மொழிபெயர்ப்புப் பா , துளிப்பா, சிறார் பாவரங்கம் நடைபெற்றன.  – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாய்க் கொள்க!

மதுரை  உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் 06.01.14 அன்று நடத்தின. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், விழா மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். இவ்விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு பேசிய தகவல் தொழில் நுட்பத்துறை அரசுச் செயலாளர்  தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில், தமிழில் உள்ள அறநெறிகளை ஆழ்ந்தும் படிக்கவும் தமிழர் பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்கு எடுத்து விளம்பச்செய்யவும் இன்றைய தலைமுறையினர் முயல…

நடராசர் கோயில் தீர்ப்புக்கு அரசின் பொறுப்பின்மையே காரணம் : கருணாநிதி

   சிதம்பர நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின் கவனமின்மையே  காரணம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது  நீக்கியுள்ளது.   அ.தி.மு.க. அரசு…