அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா பிப்ரவரி முதல் நாளன்று மலைத் தோற்ற(மவுன்டைன் வியூ) உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1100-க்கும் மிகுதியான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் திருநாளை அட்லாண்டா மக்கள் வியக்கும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்கு, இவ்வளவு மக்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளை, அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். “தமிழன் என்று சொல்லடா,…
அமெரிக்காவில் ஆர்கன்சாசு பகுதியில் மண்வாசனைப் பொங்கல்
அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தில் உள்ள பென்டன்வில்,இராசர்சு, பெயெட்வில், உலோவெல் பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு ஆர்கன்சாசு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ‘மண்வாசனை‘ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மண்வாசனை 750 விருந்தினருடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு, வேட்டி சட்டை அணிந்த தன்னார்வலர்கள் விருந்தினரை வரவேற்று, மணக்க மணக்க மதிய உணவு படைத்தனர். இலையில் 16 வகை உணவு, விருந்தினருக்கு அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே பரிமாறப்பட்டது. மன நிறைவாக உணவு உண்ட…
ஊசுடனில் தமிழர் திருவிழா
அமெரிக்காவின் டெக்சசு மாகாணத்தில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் பியர்லேண்டு, கேட்டி, உட்லண்ட்சு மன்றக் கிளைப் பள்ளிகளது மாணாக்கர்கள் பங்குபெற்ற திருக்குறள் திருவிழா,பொங்கல் திருவிழா, பட்டிமன்ற நிகழ்வுகள் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பியர்லேண்ட் கிளையில் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம்புரிந்த “இயந்திரத்தினால் நமக்கு ஏற்படுவது நன்மையா? தீமையா?” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் மாணாக்கர்களின் அறிவுத்திறனை அதுவும் தமிழில் வெகு சிறப்பாக வெளிக் கொணர்ந்தது. அனைத்துக் கிளைகளின் மாணாக்கர்களும் பங்குபெற்ற திருக்குறள் திருவிழாவில் ஒரு திருக்குறளுக்கு ஒரு தாலர் என்ற அடிப்படையில் திருக்குறளையும் அதற்கான…
வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்
பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள். …
புளோரிடாவில் பொங்கல் விழா
புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் தைப்பொங்கல் பண்டிகை, மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆர்லாண்டோ நகரில் வசிக்கும் தமிழர்கள் ஆலயத்தில் ஒன்று கூடிப் பொங்கலிட்டுச் சூரியனுக்குப் படையலிட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் எனக் கலந்து கொண்ட அனைவரும் நமது பரம்பரை உடையில் வந்திருந்திருந்தது விழாவிற்குக் கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இவ்விழாவில் ஏராளமானோர்…
செய்திக்குறிப்புகள் சில
வேளாண்மைத் துறை சார்பில் உரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார் உரூ.12.81 கோடி செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், புதிய கட்டடங்களை முதல்வர் செயலலிதா திறந்து வைத்தார். உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 159 ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் அதன் தனி அலுவலர்(பொ) முனைவர் க. பசும்பொன் அவர்கள் தல்லாகுளம் அருகில் உள்ள உ.வே.சாமிநாத(ஐய)ர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். மொகாலி: பஞ்சாப் மாநில வேளாண் மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற …
முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்
18.02.2014 அன்று நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157 முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு பாச முகங்களையும் கண்டது மகிழ்ச்சிக்குரியது. முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஒளிவீசும் கண்களும், அன்பு ததும்பும் சொற்களும்கொண்ட 80 அகவை இளைஞர் முனைவர் சித்தர் அ.பாண்டியன்….
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக்கருத்தரங்கம், நெல்லை
பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்
பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14) சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது. தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது.
சென்னை ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்– அமைச்சர் செயலலிதா, பிப்.21,2014 வெள்ளியன்று திறந்து வைத்தார். பன்னோக்கு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன. வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லாத புதிய மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன. தனியார் உயர்நிலை மருத்துவமனைகளுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. மூளை, இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அறுவை மருத்துவம் இல்லாமல் சரி செய்து பண்டுவம் அளிக்கஉரூ.5 கோடி மதிப்புள்ள இரத்த நாள அடைப்புநீக்குக் கருவி வாங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு…
தென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க.
திமுக 10- ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: சேதுக்கால்வாய் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும். கச்சத்தீவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு எதிர் ஆவணம் கண்டனத்துக்கு உரியது. ஈழத் தமிழர் வருகின்ற மார்ச்சு மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா….
(உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா
கிகாலி : (உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல் நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகைச்சுவை நாடகம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. விழா நிறைவில் வாழை…