இந்தி எதிர்ப்பில் சிறை சென்ற செம்மல்கள், 1964

தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்புப் போரில் வெஞ்சிறை புகுந்துள்ள தமிழ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ, பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.ஏ, தோழர் எசு.சே. இராமசாமி, எம்.எல்.ஏ. தோழர் விழுப்புரம் சண்முகம், எம்.எல்.ஏ, தோழர் ஆ.தங்கவேலு, எம்.எல்.ஏ, தோழர் என் இராசாங்கம், எம்.எல்.ஏ, தோழர் அன்பில் தர்மலிங்கம் எம்.எல்.ஏ, தோழர் எம்.எசு.மணி, எம்.எல்.ஏ, தோழர் து.ப.அழகமுத்து, எம்.எல்.ஏ, தோழர் தியாகராசன், எம்.எல்.ஏ, தோழர் வெங்கலம் எஸ்.மணி, எம்.எல்.ஏ, தோழர் நாராயணன், எம்.எல்.ஏ, தோழியர் செகதாம்பாள் வேலாயுதம் எம்.எல்.ஏ, –      குறள்நெறி: ஆனி…

செய்திக் குறிப்புகள் சில

      உலக  மக்கள் தொகையில் எழுத, படிக்கத் தெரியாதவர்களில் 37% இந்தியாவில்தான் இருக்கிறார்கள்  – அனவைருக்குமான கல்வி இயக்க அறிக்கை(EFA Global Monitoring Report, 2013-14)        பெரியாண்டி என்னும் நூறு அகவை மூதாட்டியைப்  பேணும் மதுரை இடையப்பட்டியைச்  சேர்ந்த  6 ஆம் வகுப்பு பயிலும் அருச்சனாவிற்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது.       பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விசாலானி என்கிற சிறுமிக்கும்,       பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற…

68 ஆவது திங்கள் பாவரங்கம்

  புதுச்சேரி : 27.01.2014 அன்று மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்திய 68 ஆவது திங்கள் பாவரங்க நிகழ்வில் “திருக்குறளைத் தேசிய நூலாக்கு” என்ற தலைப்பில் மரபுப் பா, புதுப்பா படித்தனர். மற்றும் துளிப்பா, சிறார் பா , மொழிபெயர்ப்புப் பா, கழக இலக்கியம் அறிமுகம் ஆகியவை நடைபெற்றன. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் செயலராக தேர்வு பெற்ற பரிதியன்பன் (மு. பாலசுப்பிரமணியன்) அவர்களை மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் செயலர், தேசிய குழந்தை விருதாளர் கு.அ.அறிவாளன் சிறப்பித்தார். தலைவர்,…

நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்

– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…

சங்க இலக்கிய அறிஞர் வைதேகி அம்மையாரின் பட்டறை- தேவகி

சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை (வட கரொலினா) சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனும் ஐயத்திற்கான விடை தேடுமுகமாக, வட கரொலினாவில் திருமதி. வைதேகி அவர்கள் நடத்திய ‘சங்க இலக்கியம் படிப்பது எப்படி’ என்கிற பயிற்சிப் பட்டறை தொடங்கியது. எளிமையான தோற்றம், செழுமையான இலக்கிய அறிவு, கற்பவர் உள்ளம் கவர கற்பிக்கும் திறன் என அனைத்தும் ஒருங்கே அமைந்த தமிழ்ப் பெண் திருமதி. வைதேகி என்றால் அது மிகையாகாது. முதல் நாள் பட்டறை: சங்க இலக்கியத்தை அவர் எப்படிப் படிக்கத் தொடங்கினார்…

இன்ஃபோசிசு பொங்கல்விழா

இன்ஃபோசிசு(மகநே்திர நகரில்) பொங்கல் விழாக் காட்சிகள்   செங்கல்பட்டு அருகே அமைந்த மகேந்திரநகரில் உள்ள இன்ஃபோசிசு நிறுவனத்தில் 21.01.14 செவ்வாய் அன்று தமிழர் திருநாளாகிய பொங்கல்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  அன்று காலை அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் மேளதாளத்துடன் வரவேற்று உற்சாகமாக விழா தொடங்கப்பட்டது. பொங்கல்  வைப்புப் போட்டி, கோலப்போட்டி, பம்பரப்போட்டி, உறியடிப் போட்டி ஆகியனவற்றில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாலை மதுரை ஐயா கலைக்கூடத்தினரின் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம் முதலான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  அனைவரும் உற்சாகத்துடன்…

எண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன

பண்ருட்டி ராமச்சந்திரன்  முதலான எண்மருக்குத்  தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர்  செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா  வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…

என் மொழி என் உரிமை – பேரணி.

என் மொழி என் உரிமை – சென்னையில் நடந்த மொழி உரிமைப் பேரணி. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க , தமிழக மண்ணில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் தமிழ் மொழியைத்தான் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் . ஆனால் நடுவண் அரசு நிறுவனங்கள் இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துகிறது . இந்திக்கு என்று நான்கு மாநிலங்கள் இருக்கையில் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன?  மொழியால் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களும்…

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…!

   – செயசிரீ சங்கர் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி”     தைப்பூசம் என்பது  தை மாதத்தில்   பூச நட்சத்திரமும்  முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச  ஒளி வழிபாட்டு விழா  முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.   முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார்,  தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய …