அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்
– வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர். தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்
முப்பது நாள்களில் தமிழ்
அன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை ) தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன. இதனைக் கற்பிக்க…