இஃன்போசிசு கொண்டாடிய வேட்டிநாள்
இன்ஃபோசிசு பொங்கல்விழா
இன்ஃபோசிசு(மகநே்திர நகரில்) பொங்கல் விழாக் காட்சிகள் செங்கல்பட்டு அருகே அமைந்த மகேந்திரநகரில் உள்ள இன்ஃபோசிசு நிறுவனத்தில் 21.01.14 செவ்வாய் அன்று தமிழர் திருநாளாகிய பொங்கல்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று காலை அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் மேளதாளத்துடன் வரவேற்று உற்சாகமாக விழா தொடங்கப்பட்டது. பொங்கல் வைப்புப் போட்டி, கோலப்போட்டி, பம்பரப்போட்டி, உறியடிப் போட்டி ஆகியனவற்றில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாலை மதுரை ஐயா கலைக்கூடத்தினரின் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம் முதலான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அனைவரும் உற்சாகத்துடன்…
எண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன
பண்ருட்டி ராமச்சந்திரன் முதலான எண்மருக்குத் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர் செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…
நெல்லை சுரண்டையில் மொழிபோர் ஈகியர் பொதுகூட்டம்
என் மொழி என் உரிமை – பேரணி.
என் மொழி என் உரிமை – சென்னையில் நடந்த மொழி உரிமைப் பேரணி. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க , தமிழக மண்ணில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் தமிழ் மொழியைத்தான் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் . ஆனால் நடுவண் அரசு நிறுவனங்கள் இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துகிறது . இந்திக்கு என்று நான்கு மாநிலங்கள் இருக்கையில் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன? மொழியால் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களும்…
தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…!
– செயசிரீ சங்கர் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய …
அகவிழி பார்வையற்றோர் விடுதி 8ஆம் ஆண்டு விழா
இராசா முத்தையா மேனிலைப்பள்ளி மேனாள் மாணாக்கர் சந்திப்பு-தை13,2045/ 26.01.2014
கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்
கரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது. கவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏறு தழுவல் காட்சிகள் சில
காளையை அடக்கும் காளையர் ஒளிப்படங்கள்
சமூக நீதிக்கான வீரமணி விருது
சமூக நீதிக்கான வீரமணி விருதினை மராட்டிய மாநில பொதுப் பணி- சுற்றுலாத் துறை அமைச்சர் சகன் புசுபல் (Chhagan Bhujbal) அவர்களுக்கு, மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் தமிழர் தலைவர் வீரமணி முன்னிலையில்வழங்கினார். உடன் பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் சோம இளங்கோவன், அன்பழகன் இ.ஆ.ப., சு. குமணராசன், இரவிச்சந்திரன், வீ.குமரேசன், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் (மும்பை – 11.1.2014). விழாப் பதாகையில் தமிழும் மராத்தியும் இடம் பெற்றிருக்கலாமே! ஆங்கிலம் எதற்கு?
திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை
ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது. தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை…