முப்பது நாள்களில் தமிழ்
அன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை ) தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன. இதனைக் கற்பிக்க…
