வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்

(வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்-தொடர்ச்சி) ௩. மனையும் மக்களும் மனை என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தையும் இல்லிற்குத் தலைவியாகிய இல்லானையும் குறிப்பதாகும். மனைவி என்பது மனைக்குத் தலைவி என்ற பொருளைத் தரும். மனையை ஆளுபவள் மனையாள் எனப்பட்டாள். மனைவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனையறம் எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது ஒளவையாரின் அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே…

வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்

(வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்-தொடர்ச்சி) உ. இறையருளும் நிறைமொழியும் இறைவன் எங்கும் நிறைந்தவன். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள். அவன் இல்லாத இடமே இல்லை. உயிருள் உயிராகியும் அணுவுள் அணுவாகியும் ஒளிர்பவன். அவனன்றி ஒரணுவும் அசைவதில்லை. அறக் கடலாகவும் அருட்பெருங் கடலாகவும் அறிவுருவாகவும் திகழ்பவன். விருப்பு வெறுப்பு இல்லாத விமலன். இருவினைகள் சேராத இயல்பினன். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருமை உடையவன். இத்தகைய இறைவன் திருவடி, பிறவிப் பிணிக்கு மருந்தாய் விளங்குவது….

வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்

க. திருக்குறள் தெள்ளமுதம் அமிழ்தம் என்பது அழகிய இனிய தமிழ்ச்சொல். அச்சொல்லின் இனிமைக்கு அதன் கண் உள்ள சிறப்பு ழகரமே தக்க சான்று. இயற்கை நலம் கெழுமிய இன்பத் தமிழ்மொழியே இனிமை வளம் கொழிப்பது. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. கற்பதற்கும் கேட்பதற்கும் களித்து உரையாடுதற்கும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இம்மொழி. அமிழ்தம்போன்று ஆருயிர் தழைக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இந்நாள் உலகில் வழங்கும் மொழிகள் மூவாயிரம். அவற்றுள் பழமையும் இலக்கிய வளமையும் பொருந்திய மொழிகள் இரண்டே. அவை நந்தம்…

திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ நூற்பதிவு நாள் நீட்டிப்பு அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம். தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org எனவும் தெரிவித்துஇருந்தோம். பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும்…

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள்…

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும் ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப்…

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ, கட்டுரைத் தலைப்புகள்

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா இணைந்து நடத்தும்5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் கார்த்திகை 14, 2054 / 30.11.2023 முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள் தை 17, 2055 / 31.01.2024 மின்வரி, தளம், கட்டுரைத் தலைப்புகளை அறிக்கையிதழில் காண்க.

திருக்குறள் ஆய்வரங்கம் 1028 : சனாதன எதிர்ப்பு : கு. மோகனராசு

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1028 திருக்குறள் உலக நூல் அன்று அது சனாதன தரும நூல் என்னும் பரப்புரையை மறுத்து, திருக்குறள் உலக நூல்- சனாதன எதிர்ப்பு நூல் என்பதை நிலைநாட்டும் புள்ளிவிவர அடிப்படையிலான நுட்பமான தொடர் ஆய்வுப் பொழிவுகள் 🕢 காலம் : தி. ஆ. 2054, புரட்டாசி 20 07-10-2023  சனிக்கிழமை  காலை 10-00 மணி 🌲 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,…

உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத்திருக்குறள் மையம் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021 ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை. திருவள்ளுவர் வாழ்த்து வரவேற்புரை ஆய்வாளர்கள் அரங்கம் பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள் 2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள் திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம் 3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள் அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை சிறப்பு ஆய்வுரைகள் புனித நூல்…

குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?

குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா? தமிழ்நெஞ்சங்களுக்கு, வணக்கம். தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம் நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த  2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல் கடந்த மூன்றாண்டுகளாக  இலவச இணையத் திங்களிருமுறையாகத் தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது. எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ எவ்வகையான பொருளிதவியோ வேண்டா. தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால் உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம். பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறள்நெறி குறள் முழக்கம் குறள் விருந்து  Thirukkural express அனைத்து மின்னிதழ்  களுக்குமான…

ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள்: 1.மொழி, இன , நாட்டுப் பற்றில்லாதவரைத் தேர்ந்தெடுக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள் எக்காலத்திற்கும் எல்லாவர்க்கும் ஏற்ற வாழ்வியல் நூல் திருக்குறள். திருவள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மறையாகவும் அறிவுரை வழங்கி யுள்ளார். எப்படி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்மறையாகவும் அறிவுரை வழங்கி உள்ளார்.  எப்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது என்பது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறியுரையே ஆகும். இந்நெறியுரை ஆட்சியாளருக்கு, அமைப்பின் தலைவருக்கு, என வெவ்வேறு நிலையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்க்கு, வழிகாட்டியாக இவை உள்ளன. எனவே, அனைவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும்….

தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்!- இரா. திருமாவளவன்

தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும் பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (அதிகாரம்:மெய்யுணர்தல், குறள் எண்:351) பொய்யானவற்றை மெய் என்று நம்புவது மயக்கந் தருவது; அறியாமையுடையது; பேதைமையானதாகும். வாழும் வாழ்க்கையில் அறிவைப் பயன்படுத்தி எஃது உண்மை எது பொய் என்பதை அடையாளங்கண்டு உண்மையை உணர வேண்டும். உண்மையை உணர்கின்ற பொழுது நமக்குள் படிந்திருக்கின்ற மருள் என்னும் மயக்கத்தை நாம் நீக்க முடியும். அவ்வாறு மருள் என்னும் மயக்கத்தை நீக்கினால் நம் பிறப்பு மாண்புள்ள பிறப்பாக, பொருள் நிறைந்த…