குறள் கடலில் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 4 – இலக்குவனார்திருவள்ளுவன் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார்! நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 419) நுட்பமான கேள்விச்செல்வத்தைக் கேட்டு அறியாதவரால், பணிவான சொற்களைக் கூற இயலாது என்கிறார் திருவள்ளுவர். தீவிரமாகக் கேட்பவர்(active listener) அடுத்தவர் என்ன சொல்கிறார என்பதை அடக்கத்துடன் கேட்கும் இயல்பைப்பெற்று விடுகிறார் எனக் கல்வி உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அடக்கத்துடன் கேட்பவர்கள்,…
குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 418) கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர். புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி…
குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 3 கேள்விச்செல்வத்தால் அறியாமையைப் போக்கு! பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 417) நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர். காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’…
குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 2 நல்லன கேட்டு நற்பெருமை உறுக! எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 416) சொல்லப்படும் அளவைப் பொருட்படுத்தாமல் நல்லவற்றைக் கேட்க. அஃது அந்த அளவிற்கேனும் சிறந்த பெருமை தரும் என்கிறார் திருவள்ளுவர். பெருனார்டு பரூச்சு (Bernard M. Baruch) என்னும் அரசியலாளர், “நான் அறிந்த பெரும்பாலான வெற்றியாளர்கள், கேட்பதில் கருத்து செலுத்தியவர்களே” என்கிறார். “எனைத்தானும்”…
குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
குறட் கடலிற் சில துளிகள் 1 ஒழுக்கமுடையார் அறிவுரைகளை ஊன்றுகோலாகக் கொண்டு சிறந்திடுக! இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 415) வழுக்கும் சேற்று நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல்போல் வாழக்கையில் வழுக்க நேரும் பொழுது ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும் என்கிறார் திருவள்ளுவர். ஆள்வோர் வழிதவற நேரும் பொழுது ஒழுக்கமுள்ளவர்கள் சொற்கள் நல்வழி காட்டும் என்கின்றனர் அரசியலறிஞர்கள். ஆள்வோருக்கு மட்டுமல்ல யாவருக்குமே இது பொருந்தும். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல்…
இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை : சிறப்புகள்: குமரிச்செழியன்
இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை : சிறப்புகள் இலக்கியங்கள் என்பவை மக்களின் வாழ்க்கை இலக்குகளை உரைப்பவை. உலகில் எண்ணற்ற இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன என்றாலும் உலகத்தொன்மொழியாகிய தமிழ்மொழிக்குத் தனியிடம் உள்ளது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிலும் திருக்குறளுக்குத் தனியிடம் உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை நெறிகளைப் பகுத்தும் தொகுத்தும் வழங்கும் நூல் திருக்குறள். உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டும் உரிமை கொண்டாடப்பட்டும் வருகின்ற ஒப்புயர்வற்ற உயர்ந்த நூல். திருக்குறள் ஒரு தனித்தமிழ்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 9. 6. அரண் ஏமம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்- தொடர்ச்சி ) அறிவியல் திருவள்ளுவம் ++ஃ திருவள்ளுவரை அறிவியற் கவிஞராகக் கண்டோம்ஃ ”யாம்” என்று நம்முடன் நேருக்கு நேர் பேசித் திருவள்ளுவர் காட்சி தந்தார்.ஃ அப்பெருமகனாரின் பட்டறிவுப் பேச்சு குடும்பத்தையும், தனிமாத்தப் பண்பாட்டையும், குமுகாயத்தையும் அளவிட்டுக் காட்டியது.ஃ ”அறிவறிந்த” என்னும் ஒருசொல் அறிவியல் சொல்லாகப் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றதுஃ அறிவியலில் ஓர் இயலான வானவியல் ஒரு குறளின் இரு தொடர்களில் பொதிந்துள்ளமை நயப்பில் நம்மை நிறுத்தியது. ஃ நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி,ஃ…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்- தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் 5. இனநல ஏமம் நட்பாம் கேண்மை போன்றது இனம். இங்கு இனம் என்றால் ஒருவருடன் அவருக்கு இனமாக அஃதாவது துணையாகக் கூடியிருப்பவரைக் குறிக்கும். சாதி என்பதை அன்று. கேண்மை இருவர் தொடர்ந்து ஒன்றிப் பழகுவது. இனம் கூடியிருப்பது; தொடராமலும் அமையும். நட்பு இடையறாத் தொடர்பு, இனம் ஒரு கூட்டு; செயற் பாட்டிற்குத் துணையாக உதவுவதும் பழகுவதும் இனமாதல் ஆகும். நட்பில் தீநட்பும் உண்டு; கேண்மையில் புன்கேண்மையும்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் உ.ஏமம் 3. கல்வி ஏமம் “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398) இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும். கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும். கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப”…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் உ. ஏமம் ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன. நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும். இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும். திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும், அரண்களையும், ஆட்சித்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்ஈ. இன்பம் மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.“நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்றுஅப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு“[26]என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.“ஊடுதல்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. விளைவு ‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம். ‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்….
