இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 4

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.3. மகப்பேறு குழந்தைப் பிறப்பு வரவேற்கப்பட்டது. திருமணத்தின் இயல்பான விளைவு குழந்தைப் பிறப்பேயாகும். அவர்கள் உடற்கூற்று அறிவியலை நன்கு அறிந்திருந்தமையால்  உடல் உடலறவு காலத்தை நன்கு கண்டறிந்ததுடன் குழந்தை பிறப்பையும் தம் கட்டுபாட்டில் கொண்டு இருந்தனர். அவர்கள் மிகுதியான குழந்தைகள் பெறுவதை வரவேற்றனர் எனத் தெரிகிறது (பொருள் 187). குழந்தைகள் மகிழ்ச்சிக்கான வாயிலாகக் கருதப்பட்டனரே யன்றி  சுமையாகக் கருதப்படவில்லை. கணவருக்கும், மனைவிக்கும் எப்பொழுதேனும் நேரும் ஊடலை தீர்ப்பதற்கு அவர்கள் முதன்மை பங்கு வகித்தனர். (பொருள். 147) 3.4. கல்வி…

தொல்காப்பிய விளக்கம் – 4

எழுத்துப்படலம்    –          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழின் தொடர்ச்சி)   நூன்மரபு   3.   அவற்றுள்     அ, இ,உ,     எ, ஒ என்னும் அப்பால்  ஐந்தும்     ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப   4. ஆ, ஈ, ஊ,  ஏ, ஐ     ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்    ஈர்  அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப      பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து  நெட்டெழுத்து என இருவகைப்படுத்தினர். குற்றெழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரையும்…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 3

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…

தொல்காப்பிய விளக்கம்

–          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி)   எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க.       எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.     இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …

தொல்காப்பிய விளக்கம் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) தொல்காப்பியம்எழுத்து, சொல், பொருள் எனும் முப்பெரும் பிரிவுகளையுடையது. எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியைப் பற்றியும் பொருள் தமிழ் இலக்கியத்தைப்பற்றியும் அறிவிப்னவாகும். இற்றைநாளில் மேலைநாட்டார், ஒரு மொழியின் பேச்சொலி பற்றி ஆராய்வதை ‘Phonology’ என்றும் சொற்கள்பற்றி ஆராய்வதை’ Morphology’ என்றும் அழைப்பர். இவை இரண்டும் மொழிநூலின் கூறுகளாகும். தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் ஆராய்ச்சியேயாகும்(Science of Tamil Language). உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறர்க்கு அறிவிப்பதற்குப் பயன்படும் கருவிதான் மொழி என்றாலும், உணர்ச்சி வயப்பட்ட உயர்ந்த எண்ணங்களையும் உண்மைகளையும் இனிமை…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 2

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)  வரலாற்று நோக்கு   2. மக்கள் அனைவரும் தமிழர்கள்.  தமிழ் என்னும் சொல் பனம்பாரனார் பாயிர உரையில் குறிப்பிட்டு உள்ளது தவிர தொல்காப்பிய மூலத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது. [தமிழ்’ என் கிளவியும் அதன் ஓரற்றே – தொல்காப்பியம்: எழுத்து: 386] மக்கள் தாம் பேசிய (தமிழ்) மொழியின் காரணமாகத் தமிழர்கள் என அழைக்கப் பெற்றனர். மொழியினால்  மக்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றதே தவிர மக்களால் மொழிக்குப் பெயர் வருவது இல்லை. பேராசியிரியர் வி.கே. இராமசந்திரதீட்சதர், “வயவர் ஃகரி யான்சன்டன் (Sir Harry…

தொல்காப்பிய விளக்கம்

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முன்னுரை நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத்  தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம்

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 1

 வரலாற்று நோக்கு பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழக் கூடிய தொல்காப்பியம்