இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 30   தமிழில் தொல்காப்பியர் காலம்வரை  இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 29 சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி  ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின. பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின் புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன.  ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு  ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி   இவ்வாறே படர்க்கை ஒன்றன்பால், பலவின்பால், தன்மை, முன்னிலை விகுதிகளும் தமிழ்க் குடும்ப மொழிகள் அனைத்திலும் ஒரே வகையாக அமைந்துள்ளமையைக் காணலாம். விரிக்கின் பெருகுமாகையால் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதை விடுத்து இனி எண்ணுப் பெயர்களை நோக்குவோம்.   தமிழ்                      மலையாளம்        கன்னடம்   தெலுங்கு  ஒன்று                      ஒன்னு                      ஒந்து                         ஒகட்டி  இரண்டு     ரண்டு                      எரடு              இரடு  மூன்று                   …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி வேற்றுமை   திராவிட மொழிகளில் எல்லாம் வேற்றுமைகள் எட்டெனவே கொள்ளப்பட்டுள்ளன. வேற்றுமைகளை அறிவிக்கும் உருபுகள் பெயர்க்குப் பின்னால் பெயருடன் சேர்ந்து வருகின்றன. இவ் வுருபுகள் தொடக்கத்தில் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாக இருந்து நாளடைவில் தனித்தியங்கும் இயல்பு கெட்டு இடைச்சொற்கள் நிலையை அடைந்து விட்டன என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றார். இந் நிலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் அவை வேற்றுமையுணர்த்தும் உருபுகளாகவே கருதப்பட்டு இடைச்சொற்களாகவே…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  5. பழந்தமிழ்ப் புதல்விகள் பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர்   எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும்   உன் உதரத்து  உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்மொழி பல மொழிகட்குத் தாயாயுள்ள செய்தியை இனிமையுற எடுத்து மொழிந்துள்ளார்கள்.   இன்று திராவிட மொழிகள்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி  வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை.  ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்-  கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள்  -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி சொல்              பழம்பொருள்            புதுப்பொருள்  அகம்                     உள்,மனம்                கருவம்  அகலம்                மார்பு                        இடத்தின் பரப்பு  அவல்                    பள்ளம்                        தின்னும் அவல்  இயம்புதல்        ஒலித்தல்                  சொல்லுதல்  கண்ணி        அடையாள மாலை      வலை  கருவி                  தொகுதி                   ஆயுதம்  கிழவன்       உரியவன்              முதியவன்  கோடை      மேல்காற்று                 வெயிற்காலம்  சாறு                  திருவிழா               …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம்.   கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது.             கடியென் கிளவி            …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்

by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு  ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்…

தமிழர் பழக்க வழக்கங்கள் 1 – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  23 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  24   13. பழக்க வழக்கங்கள்  மக்கள் அன்றாடம் வாழ்வில் கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்து பின்னர் அவையே நாகரிகப் பண்பாட்டுச் செயல்முறைகளாக மாறிவிடுகின்றன.  எல்லாப் பழக்கவழக்கங்களும் அவ்வாறு அமைந்து நிலைத்து நிற்கும் என்று கூறுவதற்கின்று.  இப் பழக்க வழக்கங்கள் என்றும் ஒருதன்மையாய் இருக்கும் என்றும் கூற இயலாது.  சில மறையும்; சில தோன்றும்.  உயர்பண்பாட்டுக் குரியனவாய் உள்ளன மட்டும் காலவெள்ளத்தைக் கடந்து…