தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2        பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும்  செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல்  தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது.      தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா கவியரங்கம் இடம் –  காப்பிக்காடு (நாகர்கோவில்)   நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை –  கவிஞர் குமரிச்செழியன்]   தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்             களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்             இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்             காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும்             வீழாத   தமிழன்னையை  …

காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காதல் கொள்வோரே கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்!     காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி…

உலகத் தொல்காப்பிய மன்றம், தொடர்பொழிவு- 6, புதுச்சேரி

  வைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை   உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ‘தொல்காப்பியம் – மரபியல்’ என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு நடைபெறுகின்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்!

உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா

  தமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா  வைகாசி 01, 2047 –  21.05.2016 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன்,…

தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் – 3, கனடா

வைகாசி 01, 2047 / மே 14, 2016 பிற்பகல் 3.00 – 5.00 உலகத் தொல்காப்பிய மன்றம், கனடாக் கிளை “உயிரின வகைப்படுத்தல் குறித்து அரிசுட்டாட்டிலும் தொல்காப்பியரும் – ஓர் ஒப்பீடு” உரை – முனைவர் பால சிவகடாட்சம்    

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…

தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது! – பேரா.சி.இலக்குவனார்

தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது   தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே, தமிழக வரலாறும் பண்பாடும் அறிய விரும்புவோர் தொல்காப்பியத்தைத் தவறாது கற்றல் வேண்டும். தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது என்ற குறிக்கோளைக் கொள்ளுதல் வேண்டும். கல்வித் திட்டமும் அதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். தொல்காப்பியம் கற்றுத்…

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் – பேரா.சி.இலக்குவனார்

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள்   புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் ; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். -பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய…