கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம் கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப் பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி 5 மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக் கொள்ளா தொழியேன்…
வெருளி நோய்கள் 96 – 100 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 91-95 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 96 -100 96.) 58 ஆம் எண் வெருளி – Pentekontoctophobia58 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 58 ஆம் எண் வெருளி.pentekonta என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 50 என்றும் octo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 8 என்றும் பொருள். Pentekontoctophobia – fear of 58 (branch of numerophobia) = 58 குறித்த வெருளி. எண் வெருளி வகைப்பாட்டைச் சேர்ந்தது.58 ஆம் எண்ணிற்குரிய சொல், வளமின்மை என்னும் பொருள் தரும் மற்றொரு…
வெருளி நோய்கள் 66-70 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 61-65 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 66-70 66.) 14 ஆம் எண் வெருளி – Quattuordecimphobia14 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 14 ஆம் எண் வெருளி. 00 67.) 15 ஆம் எண் வெருளி Quindecimphobia15 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 15 ஆம் எண் வெருளி.00 68.) 16 ஆம் எண் வெருளி – Hekkaidekaphobia16 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 16 ஆம் எண் வெருளி.00 69.) 17 ஆம் எண் வெருளி…
நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்
நீயா நானா முகங்கள் தமிழில் வடமொழிக் கலந்ததால் சேர நாட்டை நாமே இழந்து விட்டோம் இலக்குவனார் திருவள்ளுவனிடம் அசுவின் நேர்காணல்
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13, அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ 12 – தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13 முன்னரே குறிப்பிட்டவாறு உயிரியறிவியலும் பயிரறிவியலும் தனியே பார்க்கப்பட வேண்டியவையே! இருப்பினும் இங்கே நாம், கட்டட அறிவியல் குறித்துப் பார்த்தாலும் கட்டட அமைப்பிற்குத் துணைநிற்கும் தோட்ட வளர்ப்பு குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும், சிறிது அறிவதும் பொருத்தமானதே என்பதால் நாம் மனைத்தோட்டம் குறித்துப் பார்த்தோம். இனி மனைவளர்ப்பு உயிரினங்கள் சில குறித்துக் காண்போம். தோட்ட அமைப்பைச் சார்ந்தே வீடுகள் அமைக்கப்பட்டமை போல் உயிரினங்களின் வளர்ப்பிற்கும் ஏற்ற அளவில் அவை சிறப்பாக…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார். …
G எழுத்து வெருளி + 2. J எழுத்து வெருளி + 3. P எழுத்து வெருளி + 4. T எழுத்து வெருளி + அளறு / hell சொல் வெருளி
(தொடரும் ) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல்
33.“சனாதனம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதைத்தான் விவரிப்பதாகக் கிருட்டிணசாமி கூறுகிறாரே!+34.சனாதனத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே!-இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 31 – 32-தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34 சூத்திரன் மன்னனாக இருக்கும் நாட்டில் வசிக்கக் கூடாது.. .. ..சண்டாளர்கள் வசிக்கும் நாட்டிலும் வசிக்கக் கூடாது. (மனு 4.61) சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும். (மனு 8. 22) சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். மனு 11. 13) நற்பண்பான(யோக்கியமான) அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது. (மனு 11. 20) சனாதனம் கூறும் இவற்றைத்தான்…
பரணர் பாடலில் நியூட்டன் விதி – இலக்குவனார் திருவள்ளுவன்
(பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் – பரணர் பாடலில் நியூட்டன் விதி நியூட்டன் விதிகள் என நம்மால் போற்றப்படுவன, அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் (திசம்பர் 25,1642-மார்ச்சு 20,1727) கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத் தகுந்தனவாகும்.விசை, விரைவு பற்றிய இவ்விதிகளுள் நியூட்டனின் இரண்டாம் விதி பற்றி மட்டும் நாம் பார்க்கப் போகிறோம். திசைவேகம், பொருளின் தாக்கும் விசையைப் பொறுத்து அமையும் என்கிறார் அவர். இதன்படி, ஒரு நேர்க்கோட்டில் செல்லும் விசை, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது தாக்கும்போது அந்த விசை வேகம் மாறுபட்டு அமையும் அல்லது…
வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள் – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 14-15 14. வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? ? இந்த வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையைத், தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின. – இவ்வாறு இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா? இவ்வாறு…
தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே! இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…
எல்லாரும் சமம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனச் சனாதனவாதிகள் கூறுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா? இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும். பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம்….