சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 611-615

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 611-615 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும்  பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 611. Weight – நிறுக்குங் கருவி இரயில் நிலையுங்களில் சீட்டு(டிக்கட்டு) வாங்கும் ஜன்னல்களுக்கு முன்னே ஒரு வெயிட் (நிறுக்குங் கருவி) ஒன்று பலகைபோல் போட்டு விட்டால் அதன் மேல் ஏறி நின்றுதான் சீட்டு(டிக்கட்டு) வாங்க நேரிடும். அப்படி ஆள் ஏறியவுடன், ஏறினவன் இத்தனை பவுண்டு எடையுள்ளவன் என்று டிக்கட்டு விற்பவர்களுக்கு ஒரு முள் காட்டிவிடும். ஒரு பவுண்டுக்கு ஒரு மைலுக்கு இவ்வளவு கட்டணம் என்று ஏற்படுத்தி எடையின் மீதுசீட்டு(டிக்கட்டு )…

தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன்

காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது  “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு…

தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு?

(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி) துவாலு தெரியுமா உங்களுக்கு? துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர். நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை  எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84

(குறிஞ்சி மலர்  83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….

(இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி

தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் வணக்கம் மலேசியா சப்பான் தமிழ்ச் சங்கம் (இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி காணொளி அனுப்ப இறுதி நாள் : 28-12-2022 (புதன்) அனைவருக்கும் வணக்கம்! இணைய வழியாக நடைபெறும் மாபெரும் பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் பங்கெடுக்க விரும்புகிறீர்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு! ‘ வணக்கம் மலேசியா ‘ நடத்தும் இந்த உலகளாவிய முழக்கத்தில்  சப்பான் தமிழ்ச் சங்கமும்  ஒரு குரலாய்ப் பங்கெடுப்பதில் பேருவகை கொள்கின்றது!  மாணவர் முழக்கம் – 10 வயது முதல் 13…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 

(தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 551. Monkey Screw — குரங்குத் திருகு விளக்கைப் பிரதாப்சிங்கிடம் கொடுத்துவிட்டுத் தன் இடுப்பிலிருந்து ஒர் நீண்ட கயிற்றைக் கழற்றினாள். அது சுமார்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4

(புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4 முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள் அகவல் மோனை:   பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப்           பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி           பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும்           பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப்           பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று           முத்து  விளையாட் டொன்றுஎன் முகத்தில்           மெத்தென் றாடினால்…

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்

வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் ! – புலவர் பழ.தமிழாளன்

வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் ! 1. அருட்பே   ரொளியே  இறையெனக்                          கொண்ட   அருளகத்தார் / உருவ  வழிபா  டொழித்தசீர்   ஒப்பில்                                              ஒளிமுகத்தர் / கருவில்  திருவினைக்  கையகம்                            பெற்ற  கலைநிறைஞர் / அருட்பா  படைத்தே  அதன்வழி  வாவென்                                   (று)   அழைத்தனரே ! / 2. சாதி     சமயச்   சழக்கை   ஒழித்துச்                                               சமமெனவே / ஓதியும்  மக்களை  ஒன்று  படுத்திய                                             ஒண்மையராம் / வேதியர்  கூற்றை  விலக்கியே  வாழ்ந்த                                         நல்    வள்ளலவர் / ஏதிலார்  கண்டே …

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                  

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                   “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/  12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக்  கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது.  சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 408-410

(தமிழ்ச்சொல்லாக்கம்: 403-407 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 408-410 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 408. Governor – காவலர் விசுவநாதரின் இராச விசுவாசமும் வீரமும் புயவலியும் இத்தன்மையவென உணர்ந்த இராயர் மகிழ்ச்சியுற்று அவர் வேண்டும் வரங்களைக் கொடுப்பதாகச்…