தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!
இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும் தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர். அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும் பிற மொழி பேசுவோர் தம்…
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழிசை வேண்டும் என அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈராக்கிலோ உகாண்டாவிலோ கேட்கவில்லை. மொழிகளுக்கு எல்லாம் தாயான முத்தமிழ் வழங்கும் நம் நாட்டில்தான் போராட வேண்டியுள்ளது. எந்த ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு மொழியில்தான் இசை இருக்க வேண்டும் எனப் பன்னூறு ஆண்டுகளாகப் போராடுகிறார்களா? என்றால் அந்த இழிநிலை நம் அருமைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பிற நாடுகளில் சிற்சில காலங்களில் அயல் இசை ஆதிக்கப் போக்கு இருந்திருந்தாலும் தாய் இசையின் உரிமையை மீட்டெடுத்துப் போற்றிவருகிறார்கள். இங்கிலாந்தில்கூட 200 ஆண்டுகள் செருமானிய இசை மேலோங்கிய…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட் – உருப்பருப்பு, படகரு அங்குட்டம் – பெருவிரலளவு அசோகு – பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம் – கோழி முட்டை நெய்மம் அண்டவாதம் – விரையழற்சி அட்சதை – மங்கல அரிசி அத்தர் …
சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்
பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திசம்பர் 11 அன்று பதவி ஏற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில் வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர் இரு முதுகலைப்பட்டங்கள் , இரண்டு சட்ட முதுகலைப் படிப்பு, இரண்டு முனைவர் பட்டம் ஆகியனவற்றிற்கு உரியவர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி அறிவியலராகப் பணியாற்றி…
வட மாநிலத் தேர்தல் : காங்கிரசு துடைத் தெறியப்பட்டது
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2013 (அடைப்பிற்குள் கடந்த தேர்தல் முடிவுகள் குறிக்கப் பெற்றுள்ளன.) மாநிலம் மொத்தத் தொகுதிகள் பா.ச.க. காங். ஏழை மக்கள் கட்சி பிற தில்லி 70 31(23) 8(43) 28(-) 3(4) இராசசுதான் 200 162 21 16(3)- மா; 0(23) மத்தியப்பிரதேசம் 230 165(143) 58(71) 7(7) – ப; 0(7) சத்தீசுகர் 90 49(50) 39(38) 2(2) மா – மார்க்சியப் பொதுவுடைமை ப – பகுசன் …
மதுவிற்கு அடிமையாகும் மாணாக்கியர் – வைகோ கவலை
திருநெல்வேலி: “ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், மதுக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது’ எனக், கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில், த.மா.வா.க.(‘டாசுமாக்’) மதுபானக் கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி உரூபாய் வருமானத்திற்காகத் தமிழக அரசு, பண்பாட்டைக் குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக…
தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்
கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான சொத்துக்களைக் கவர்ந்து, ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள் மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…
சாதிக்கொரு நீதி- சரிதானா? முறைதானா? அறம்தானா? – இதழுரை
தண்டனை என்பது குற்றச் செயலுக்கு என்பதே உலக நடைமுறை. அதுவும் “ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் தேர்ந்து செய்”வதாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ்மறையாம் திருக்குறள்(541) நமக்கிட்டுள்ள கட்டளை. ஆனால், யாரையேனும் தண்டித்தாக வேண்டும் என்பதற்காக அப்பாவிகளைத் தண்டிப்பதும் குறிப்பிட்ட யாரையாவது தண்டிக்கக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகளை விடுதலை செய்வதுமான போக்கே நம் நாட்டில் நிலவுகிறது.
மாவீரர் உரைகளின் மணிகள் சில!
தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழ்ஞாலத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஆற்றப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நம் நினைவிற்காக இம்மாவீரர் கிழமையில் வழங்கப்படுகிறது. “எமது போராட்டத்தில் இன்று ஒரு முதன்மையான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக இன்று…
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 2
– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தாய்ப்பாலும் நாய்ப்பாலும் ஒன்றாகாது. ஆங்கிலேயன் தமிழை விரும்புகிறான். ஆனால், தமிழனோ ஆங்கிலத்தை நேசிக்கிறான். – தில்லை அம்பலம் தில்லை (Telai Amblam Thilai) தாய்ப் பாலும் புட்டிப் பாலும் ஒன்றாகுமா? என்று எழுதுங்கள் – அது நாகரிகமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். – யான்சன் விக்டர்(Johnson Victor) தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும் என்போர், ஆங்கில நாட்டில் குடியேறட்டும். – சிறீதர் இராசசேகர் (SRIDHAR RAJASEKAR) தனக்கென்று ஒரு வரிவடிவு…
மேனாள் தமிழ் ஒலிபரப்பாளர் கௌசி இரவிசங்கர் காலமானார்.
தமிழ்த் தேசிய ஊடக உலகில்புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசிஇரவிசங்கர் அவர்கள் காலமானார். பன்னாட்டு ஒலிபரப்பு அவையின் தமிழ் (ஐ.பி.சி) ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி இரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி இரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முகமாலையில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும்,ப.ஒ.அ.(ஐ.பி.சி) வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர்க் கிளிநொச்சியில் நடைபெற்ற…
ஆய்வுக் களம்
தாய்ப்பால் வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத் தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர் நல்குரவு சேரப்பட்டார் நல்லாதனார், திரிகடுகம். 84 ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர் தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் … கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பா ணாற்றுப்படை, ,249- 252 தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி புனைந்த நல்ல சிறு…