உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார்

(க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்) தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்; வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும் என்கின்றார்; இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும். அன்றுதான் அறிவியல் தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை; தமிழ்ச்சங்கங்கள்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு-தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் ஏக்கம் பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல                    நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப்     5           பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள்மனம் இருந்த வாறே!                  பின்னே வாழ்விற் பேதுறு வாளே  10…

மெய்ம்மி – tissue: இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம் மெய்ம்மி – tissue ஆகத்து 29, 2012    12:03  இந்தியத் திட்ட நேரம் உடல் என்றும் கூறப்பெறும் மெய் அமைய ஏதுவாக ஓரே திறனும் ஒத்த பண்பும் கொண்ட உயிர்மிகள்(cells) இணைவதற்கு மெய்ம்மிகள் என்று பெயர். திசு எனத் திஃச்யூ (tissue) என்னும் சொல்லின் தமிழ் ஒலிவடிவமாகக் கூறப்படுவது இதுவே ஆகும். நெய்வு என்னும் பொருளுடைய இலத்தீன் சொல், பழைய பிரெஞ்சில் இடம் பெற்று, . அதிலிருந்து இடைக்கால ஆங்கிலத்தில் உயர்வகைத் துணியைக் குறிக்கும் (tissu என்னும்) சொல்லில் இருந்து…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 : உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!  “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”                       கலித்தொகை 149 : 6 – 7  கலித்தொகை – நெய்தற் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை – மருதம் கி.மு. காலத்துப் பாடல் ஒற்கம் என்றால் வறுமை. தான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம்…

உயிர்மி (உயிரணு) – cell-இலக்குவனார் திருவள்ளுவன்

உயிர்மி (உயிரணு) Cell (Biology) ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம் நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல். செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி, தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள்…

க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார்

(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – -தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்           க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள். இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், (இ)லட்சியம், (இ)லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர்…

இலக்குவனார் திருவள்ளுவனுக்குப் படைப்பாற்றல் அரசு விருது

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் பங்குனி 08, 2056, மார்ச்சு 22, 2025 அன்று புதுச்சேரியில் இலக்கியப்போடடிப் பரிசளிப்பு விழாவும் மகளிர் நாள் விருது வழங்கு விழாவும் கொண்டாடியது. இவ்விழாவில் ‘அகரமுதல’ ஆசிரியர் எழுத்தாளர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுக் கட்டுரைப் பிரிவில் முதல் பரிசு வழங்கியதுடன் படைப்பாற்றல் அரசு விருது வழங்கிப் பாராட்டியது. புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 89. சிந்தனை செல்லும் வழி சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் – ‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்கணமும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர். அத்தகைய…

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? பெரியார் ஈ.வெ.இரா.குறித்து நாம் பின்வருவனவற்றை அறிவோம். 1. பெரியார் ஈ.வெ.இரா. நிறைகள் 2. பெரியார் ஈ.வெ.இரா. குறைகள் 3. பெரியார் ஈ.வெ.இரா. மீது குறைகளாகச் சொல்லப்படுவன 4. பெரியார் ஈ.வெ.இரா. குறித்த பழிப்புரைகள் பெரியார் மீதான பழிப்புரைகளையும் குறைகளாகச் சொல்லப்படுவனவற்றையும் பார்த்தாலே அவரைப்பற்றிய நிறைகளையும் நாம் அறியலாம். எனவே, மேற்குறித்தவற்றை நாம் வரிசை மாறிப்பார்க்கலாம். இதழ்களிலும் பிற…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 16 : ஆகமங்களின் தோற்றம் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – தொடர்ச்சி) 5. ஆகமங்களின் தோற்றம் வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘’இந்தியத் தத்துவத்தின் சுருக்கம்” என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒருசிறிதும், அல்லது, அறவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேத நெறிக் கடவுள் வழிபாட்டு முறையான வைதீக நெறி , மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது பெரும்பாலும் அழிந்தே விட்டது….

குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 418) கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர். புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி…

சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 911. assistance international/International assistance     பன்னாட்டுதவி   பன்னாட்டு உதவி   ஒரு நாட்டிற்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள்.   பன்னாட்டு உறவுகள் மூலமும்  பன்னாட்டவை( UNO), பன்னாட்டுப் பண நிதியம் (International Monetary Fund) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமும் கிடைக்கும் உதவிகள்.   1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் காவல் துறை(The International Criminal Police…