கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, இலண்டன்

    83ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.   1983 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் நாள் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஆடி 07, 2046 / சூலை மாதம் 23 ஆம் நாள்…

மக்கள் கவிஞர் அறக்கட்டளை – முனைவர் நாராயணன் கண்ணன் வரவேற்பு

ஆடி 06, 2046 / சூலை 22, 2015 மாலை 5.30  உமாபதி அரங்கம், சென்னை மலேசியப் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்கும்  – அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்தும் இனிய விழா. பேராசிரியர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்க அனைவரையும் அன்புடன் அழைப்பது உங்கள் அன்பின்…. – ஆதிரா முல்லை  

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாட்டுத் துறையின் சார்பாக இந்த ஆண்டு கொண்டாட விழைந்திருக்கும் கோடைவிழா வரும் புரட்டாசி 16 / அக்டோபர் மாதம் 3ஆம் நாள் “வணக்கம் தமிழகம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோக்கியோ மாநகரில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவில் ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான நமது பரம்பரை விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. உடல்நலம் காக்கும் நம் தமிழர்களின் விளையாட்டுகளையும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற நம் பரம்பரை உணவு…

சாதி வெறி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் – சுப.வீ.

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்துக்  கண்டன ஆர்ப்பாட்டம் சுப.வீரபாண்டியன் அறிக்கை   அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராசு, விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது.   இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து,…

ஞானாலயா கிருட்டிணமூர்த்தி 75 ஆவது பிறந்த நாள்

நண்பர்களே, நம் பாரதத் திருநாட்டின் விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள்.   எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015, இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட, கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.   மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா! உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா! நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,   பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்…