வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு

வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com     திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன். – க.ச.கலையரசன், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம். 9551547027

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்

 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)  

அனைத்துலகப் போதிதருமர் மாநாடு

 அனைத்துலகப் போதிதருமர்  மாநாடு   ( ஆடி 28, 29, 2046 /  13,14  ஆகத்து  2015) சென்னை,  இந்தியா   வரும் ஆகத்துத் திங்கள் 13,14 ஆகிய இரு நாட்களில் அனைத்துலகப் போதிதருமர் மாநாடு சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை ஆசியவியல் நிறுவனமும், சப்பானிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கழகமும், சீன நாட்டிலுள்ள சவோலின் ஆலயமும், மொரிசியசு நாட்டிலுள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பும்,  ஆங்காங்கு நாட்டிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றன . கி.பி. 6ஆம்…