‘சிகரம் நம் சிம்மாசனம்’: இலக்கு – மார்ச்சு நிகழ்வு
வணக்கம்.. நலம். வளம் சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது. இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும். உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.
பார்வையற்றோர் போராட்டத்திற்கான அழைப்பு!
ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மாசி 25, மார்ச்சு 9 அன்று பார்வையற்ற மாணவர்கள்- பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற உண்ணாநோன்பு அறப்போராட்டம்! நண்பர்களுக்கு வணக்கம்! வருகிற திங்கட்கிழமை அதாவது 09/03/2015 அன்று நடைபெறவிருக்கும் காலவரையற்ற உண்ணா நோன்பு அறப் போராட்டத்திற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்! ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது உண்ணா நோன்பு ஈகையர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு, உறுப்பினர்களிடமிருந்து உற்சாக ஆதரவு வேண்டுகிறோம். பணி நாடுநர்கள், பணியில் உள்ளவர்கள், மாணவர்கள் என்ற மூன்று தரப்பினர்களையும் மையப்படுத்தியே இந்த ஒன்பது கோரிக்கைகளும் கட்டமைக்கப்…
சமூக ஆய்வு வட்டம்
நிகழ்ச்சி நிரல் தலைப்பு : “தமிழகக் கோயில் கட்டக் கலையும் அங்க இலக்கணமும்” சிறப்புரை: சே.இரஞ்சித் காப்பாட்சியர் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை ஆர்க்காடு இடம்: பனுவல் புத்தக நிலையம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை. திருவான்மியூர், சென்னை நாள்: மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015. நேரம்: மாலை 5.30 முதல் 7.30 மணி வரை தொடர்புக்கு: திருமிகு. அ.கா. ஈசுவரன் 9283275513, திருமிகு. ஆ. பத்மாவதி 9884354133 மின்னஞ்சல்: samoogaaaivuvattam@gmail.com வலைப்பூ: http://samoogaaaivuvattam.blogspot.in
புலர்வு
மாசி 30, 2046 – ஃசுகார்பரோ வணக்கம். அறிவகம் – கனடாத் தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்தும் புலர்வு நிகழ்வை ஊடகத்தினூடாக மக்களுக்கு அறியத்தந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். கனடா மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க கடந்த பல ஆண்டுகளாக தம்மை ஒப்படைத்து அறிவகம், கனடாத் தமிழ் கல்லூரியில் பணியாற்றும் 200 இற்கு மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக இந்த விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இரவு விருந்துடன் இந்த நிகழ்வு நடைபெறும். நன்றி. உருக்சன்…
தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா
தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…
‘தமிழம் பண்பலை’ : பொள்ளாச்சி நசன் வேண்டுகோள்
‘தமிழம் பண்பலை’ தொடங்கும் பொள்ளாச்சி நசன் வேண்டுகோள் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் கடந்த 10 நாள்களாகத் தமிழம்.பண்பலையை வடிவமைப்பதிலேயே, என் முழு நேரமும் கழிந்தது. நேற்றுதான் அதற்கான இறுதிவடிவம் கொடுத்து முழுமைப்படுத்தி இணைத்து உள்ளேன். சிறு சிறு பிழைகள் இருக்கலாம், அவை வரும்காலத்தில் சரி செய்யப்படும். தமிழ் உணர்வுள்ள பாடல்களை வெளியிட்டு இருப்பவர்கள் அருள்கூர்ந்து அந்த இறுவட்டுகளை அனுப்பி வைக்கவும். தமிழம் வலையை தமிழம்.நெட் இணையதளத்திலும் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதற்கான மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு தொடர்ந்து கேட்கலாம்….
வெல்லும் தூயதமிழ் 22 ஆம் ஆண்டுவிழா
மாசி 22, 2046 / மார்ச்சு 06,2015 புதுவைத் தமிழ்ச்சங்கம்
மார்ச்சு மாத இற்றைத் திங்கள் நிகழ்வு, அகநாழிகை
வணக்கம் நண்பர்களே, புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன. போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாகத் தேர்தலில் நின்று மக்கள் பகைவர்களைத் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையைத் தமது இறுதி இலக்குக்காகப் பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது. அதே சமயம் இந்த தேர்தல் முறையில் அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட. பெருவாரியான…
வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு
மாசி 24, 2046 / மார்ச்சு 8, 2015 கிருட்டிணன்கோயில் அருகில் மதுரை இராசபாளையம் சாலை ஈழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் முகநூலில் எழுதிய “வாய்க்கால் கரையோரம்” புத்தக வடிவில் வெளியிடப்பட இருக்கின்றது… சிங்களவனின் இன வெறியினால் தமிழினம் அடைந்த பாதிப்புகளையும், எதிர்த்துப் போராட வேண்டிய தேவையையும் உணர்த்திடும் புதினம் இது.
அம்பேத்கார் சிறப்புக் கருத்தரங்கம்
சித்திரை 07, 20146/ ஏப்பிரல் 20, 2015 புதுக்கோட்டை
பாரதிதாசன் இலக்கிய மன்ற விழா
பங்குனி 27, 2046/ ஏப்பிரல் 10, 2015 கவுந்தப்பாடி
காலச்சுவடு – இலக்கியவீதி நடத்தும் சாமிநாதம் வெளியீட்டு விழா
மாசி 23, 2046 / பிப்.25.02.2015 : மாலை 5.30 திருவள்ளுவர் அரங்கம், மாநிலக்கல்லூரி, சென்னை
