‘தமிழம் பண்பலை’ : பொள்ளாச்சி நசன் வேண்டுகோள்

‘தமிழம் பண்பலை’ தொடங்கும் பொள்ளாச்சி நசன் வேண்டுகோள் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்   கடந்த 10 நாள்களாகத் தமிழம்.பண்பலையை வடிவமைப்பதிலேயே, என் முழு நேரமும் கழிந்தது. நேற்றுதான் அதற்கான இறுதிவடிவம் கொடுத்து முழுமைப்படுத்தி இணைத்து உள்ளேன். சிறு சிறு பிழைகள் இருக்கலாம், அவை வரும்காலத்தில் சரி செய்யப்படும்.   தமிழ் உணர்வுள்ள பாடல்களை வெளியிட்டு இருப்பவர்கள் அருள்கூர்ந்து அந்த இறுவட்டுகளை அனுப்பி வைக்கவும். தமிழம் வலையை தமிழம்.நெட் இணையதளத்திலும் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதற்கான மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு தொடர்ந்து கேட்கலாம்….

மார்ச்சு மாத இற்றைத் திங்கள் நிகழ்வு, அகநாழிகை

வணக்கம் நண்பர்களே,  புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.  போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாகத் தேர்தலில் நின்று மக்கள் பகைவர்களைத் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையைத் தமது இறுதி இலக்குக்காகப் பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது. அதே சமயம் இந்த தேர்தல் முறையில் அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட. பெருவாரியான…

வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு

மாசி 24, 2046 / மார்ச்சு 8, 2015 கிருட்டிணன்கோயில் அருகில் மதுரை இராசபாளையம் சாலை    ஈழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் முகநூலில் எழுதிய “வாய்க்கால் கரையோரம்” புத்தக வடிவில் வெளியிடப்பட இருக்கின்றது… சிங்களவனின் இன வெறியினால் தமிழினம் அடைந்த பாதிப்புகளையும், எதிர்த்துப் போராட வேண்டிய  தேவையையும் உணர்த்திடும் புதினம் இது.

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்