அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்
மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப் புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS) ஒழிவிடமாக உள்ள “ஆ”, “இ” பிரிவு (குரூப் “பி” மற்றும் “சி” ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து 16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் வரம்பு பணிகளுக்கேற்ப 25 முதல் 40 வரை உள்ளன.
இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.12.2013
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 02.01.2014
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org
என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரங்கள், கட்டணம் செலுத்தும் முறை முதலான முழுமையான விவரங்கள் அறியவும் இத்தளத்தை (www.aiimsexams.org)ப் பார்க்கவும்.
Leave a Reply