முத்திரை-கப்பல் நிறுவனம் - muthirai_GRSE

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி

 கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமானர் – பொறியாளர் நிறுவனம் (Garden Reach Shipbuilders & Engineers Limited) எனும் குழுமத்தில் 20 இளநிலை மேலாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தக் காலியிடங்கள்: 20

பணி: இளநிலை மேலாளர் [Junior Manager (E-0)]

தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical), மின்னணுவியல் (Electronics) பிரிவுகளில் பட்டயத் (Diploma) தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணியறிவு(அனுபவம்) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: உரூ.550/- https://jobapply.in/grse2016 என்கிற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலுத்துச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து பாரத அரசு வங்கி கிளைகளில் இக்கட்டணத்தைச் செலுத்தலாம்.

இணைய வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.03.2016

விண்ணப்ப அச்சுப் படி (print copy) சென்று சேரக் கடைசி நாள்: 18.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.grse.nic.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்.

தோட்ட அடைவு கப்பல் கட்டுநர், பொறியாளர் நிறுவனம் வ-து.

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan