(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி)

attai_ezhilarasi

  1. புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக்

களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத்

தோழ னின்றிச் சோகமுற் றிடுவள்

வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய

மரங்களின் மீது, மார்புறத் தழுவிய

  1. தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த

கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர்

இவ்வகை நிலையை யெய்திய அரசியும்

குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய

* கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள்

  1. கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று

அரசியை யீர்க்க அவளும் ஒடி

எடுத்தனள்; தைத்து இவளே அன்பின்

தோழனுக் களித்த தொன்றெனக் கண்டனள்

ஊற்றுப் பெருக்கென விழியுமுகுந்திட

  1. ஒன்றும் தோன்றிலள் நின்றனள் இருளில்

அணைத்தனள் மார்புடன் அலறி யழுதனள்

ஆடினள் ஓடினள் அடியில் மரம்போல்

சாய்ந்தனள்; தோழியும் தன்முன் றானையால்

  1. தெளிந்தபின் அருகே சிதைந்து கிடந்த

என்புக் கூடொன் றிவளை யீர்த்தது

குருதித் துணியால் கொண்ட துயரைக்

கூட்டின் தோற்றம் நாட்டி வளர்த்தது

“காதலன் பட்டான் கையிற் கிட்டான்

  1. இன்ப வுலகம் எட்டிச் சென்றதே

துன்ப வுலகே துணையாய் நின்றதே

மன்னா வுலகில் மன்னிப் பயனென்

உயிரஃதகன்றபின் உடலாற் பயனென்?

இருப்பது மேலோ இறப்பது மேலோ?

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12)