(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி)

attai_ezhilarasi

 

  1. இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?”

என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப

“பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய்

இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி

உடலும் உளமும் ஒருங்கே வாடி

  1. மாளும் வரையில் மகிழ்வு மற்று

இறந்தோர் பலரும் எய்திய தென்னோ?

இன்னும் சிலநாள் இருந்து மறைவோன்

இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ

உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே,

  1. ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக்

கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும்

அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை

* இந்நில வுலகை இருந்ததில் உயர்த்த

இயற்றும் பெற்றியை இழந்தோ ராவர்

  1. அன்னவர் பொருட்டு அழுது, மாய்வரும்

அன்னோர் போல ஆற்றா திழப்பர்

இறந்தோர் இழப்பதும் இயல்பே; இருந்தும்

இழப்பின் எள்ளற் குரித்தே; எவர்க்கும்

இன்பமும் துன்பமும் இதயமே யளிக்கும்

  1. வருந்துவ தொழித்துத் திருந்திய வுளத்துடன்

இல்லிற் கேக எழுவாய் தோழீஈ”

என்று தேற்ற, கன்றிய உளத்தெழில்

அரசியும் சிறிது ஆறுத லடைந்து

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12)