(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி)

attai_ezhilarasi

அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப்

பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில்

  1. இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி

மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள்

யாழிடைப் பிறவா இசையே என்று

யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த

அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர்

  1. காதல னுக்கவள் சாவில் கற்பித்த

இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற

அரசி அவளை அடைந்து நோக்கலும்

கண்ணொடு கண்கள் நோக்கின காதலர்

இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து

  1. தழீஇக் கொண்டு கெழீஇய காதல்

இன்பம் துய்த்தபின் இருந்தோர் தம்மை

நோக்கி,”நுவலக் கேண்மின் நுமக்குப்

புதிதாய்த் தோன்றும் இப்பூங் குழையும்

என்றன் தோழி; இன்று வரையில்

  1. காணப் பெற்றிலேன்; கண்டேன் இன்று

இவளும் இங்கே இனிதே யிருப்பாள்

மக்களும் பிறவும் மாண்புடன் உருகும்

இன்னிசை கேட்டு இன்பந் துய்ப்போம்”

எனலும் யாவரும் ஏகினர் அவளொரு

  1. ஆடவ னென்று அறியா ராகி

அரசி தனித்தபின் ஆடலன் றனது

வரலா றுரைக்க அரசியும் பின்னர்

நிகழ்ந்தவை கூறி மகிழ்ந்து வாழத்

தோழியர் போலவே தோற்றம் விளைக்க

  1. ஆடலன் தானும் அரிவையர் தோற்றம்

கொண்டு விளங்கினன்; மண்டிய நட்புடன்

காதலர் வாழ்ந்த காட்சி

ஓதற்குரித்தே ஓதற்குரித்தே.

 

(நிறைவுறுகிறது)