புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55
(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
பாலை
51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார்
படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய்
வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால்
அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே.
52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின்
திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே
இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர்
விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே.
தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக்
கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன்
ஆட்டிநீ ‘பிரிக்கலை’ யென் றவ் வன்னையை
மீட்டுமே யூர்செல விடுக்கு வார்களே.
ஒட்டிய சுற்றமாங் குறவே மீளியைக்
கட்டியே தழுவிடுங் கற்பைக் கண்டுமே
விட்டிரு வோரையும் விலகு வார், சிலர்
இட்டிரு வோரையு மேகு வார்களே,
அடிபடு நிரைகவர் பறையி னார்ப்பினாற்
கொடுவரி வெருவுறா உங் கொதிகொள் வெஞ்சுரம்
துடியிடை யினை தரத் துரந்து செல்பவர்
படருற நண்பகற் பாலை மன்னுமால்.
குறிப்புகள்
- கடிகமழ்-மணம்வீசும். படிக்கு உற- நிலத்தில்விழ.
52, இன்று இருந்து விருந்துண்டு நாளை சென்மென.
- தோள் துணை , ஆட்டி – பெண், ‘அம்மா’ என்றபடி..
அன்னை-செவிலி. 54. மீளி – பாலைநிலத்தலைவன்.
கற்பு-மணஞ்செய்து கொள்ளும் விருப்பம், 55. நிரை-
ஆவினம். கொடுவரி -புலி. படர்-துயர்,
Leave a Reply