(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம் 

2. தமிழகப் படலம்

 

மருதம் தொடர்ச்சி

 

  1. மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட

பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால்,

குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப்

புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே.

62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம்

பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்;

வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக்

கொழுக்கவுண் டலத்துப் போன குரக்கினம் பறித்துப் போடும்.

63.நீரகம் பொருந்த நீரார் நிலவளந் திருந்த நீடும்

ஊரகந் தோறுஞ் செந்நெ லுணவக மருவ ஆணின்

சீரக வியலா ரூடல் செய்யும்வை கறையி லேரார்

பாரக முழவேர்ப் பூட்டும் பைம்பு புனல் மருதமோங்கும்.

நெய்தல்

  1. பொன்னென மலருந் தூய புன் னை யங் கான லாங்கண்

முன்னிய வலிய கோள்வல் முதலைய, மதலை யுப்பு

மன்னுநீர் கழிக்கண்மூத்த மகன்றிலம் புணர்ச்சிவாய்ந்தார்

தன்னிகர் கொண்க னோடு தாழைவீ மூச லாடும்.

 

வேறு

  1. பட்டினும்பஞ் சினுமயிர்செய் யாடை பீலி

பன். மணிசங் கணிபன் மணப் பண்ட மேற்றி

முட்டிலய னாடிறக்கி நிறைபொன் கொண்டு

முத்தமிழின் கொடி நுடங்கக் கரையை நோக்கி

மட்டவிழ்பூந் திரையில்வருங் கப்பல் கண்டு

‘வாழ்கதம், வாழ்கதமி ழக’மோ வென்னப்

பட்டினமக் கடல்வளம்பட் டெனவா லித்துப்

பரதவரப் பெருங்கடலின் பயன் கொள் வாரே,

 

குறிப்புகள்

  1. கரிக்குருத்து – யானைக்கொம்பு, போர் -வைப்போர். புரை தப-குற்றமின்றி

62, மழுக்குதல்- நீந்தத் தாழ்த்த ல். வழக்கு று தல்-

நடத்த ல். 67, அ ணின் சீரக இயலார்-சமையற் றொழிலில் வல்லமகளிர். பாரகம்உற- தமிழகம் மேம்படி, உண்டுவர ழ. 64, கானல் – கடற்கரை. ம தலை-இன்றியமையாதது. மூத்த-மிக்க. மகன் றில்-இணைபிரியாது வாழும் ஓர்நீர்ப்பறவை, 66, முட்டு- தடை. மட்டு-தேன், மணம், ஆலித்தல். ஒலித்தல்.

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை