புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி)
16. முல்லை யேமுத லாகிய
நல்லி யல்புறு நானிலத்
தெல்லை மேவிய யாவரும்
இல்லை வேறிவ ரின்றியே.
17. முல்லை யாயர் குறிஞ்சியின்
எல்லை காணி னிறவுளர்
செல்லி னெய்தல் தமிலரே
ஒல்லி வாழி அழவரே.
வேறு
18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி
ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம்
ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும்
தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற் றாரே,
19. பானுரை போலப் பஞ்சிற் பட்டி.னன் மயிரிற் பொன்னின்
நானிரைத் துள்ளங் கொள்ள நுணிகிய சாய மேற்றி
மேனிலத் தவர்மக் கொள்ள விழைதரு வனப்பிற் றாகப்
பூநிரைத் தணியா ராடை புதுமையி னெய்வார் நெய்வார்.
20. ஐவகைப் பொன்னிற் றாரி னவிர்மணி யொடுகல் மண்ணில்
கைவகைக் கலனும் பன்மைக் கருவியு மேனந் தானும்
செய்வகைப் படியே தட்டார் திறன் மிகு தச்சர் கொல்லர்
மெய்வகைக் குயவர் கண்ணார் வேதர்கற் றச்ச ரானார்.
—
குறிப்பு:
17. இறவுளர்- குறிஞ்சி நிலமக்கள். ஒல்லி-பொருத்தி, 18. குடித்தொழில் – வெளுத்தல், மழித்தல் முதலியவை. 19. பால் நுரை, நூல் விரைத்து – நூற்களை வரிசையாகப் பாய்ச்சி, பூ-பூ வேலைப்பாடு. 20. தாரு-மரம். கற்றச்சு-சிற்பம். 21. ஓவம். சித்திரம்
—
Leave a Reply