அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இலக்குவனார்
அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி
ஆட்சி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளோர். முறை வேண்டுவார்க்கும் குறை வேண்டுவார்க்கும் காட்சிக்கு எளியராய் இன்முகம் உடையராய் இருத்தல் வேண்டும். பதவியின் உயர்வால் மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் பேயைப்போல் மக்களால் அவரும் அஞ்சப்படுவர். மக்கள் உளத்தில் அன்பை வளர்த்து ஆளுதல் வேண்டுமேயன்றி, அச்சத்தைப் புகுத்தி ஆளமுயலுதல் கூடாது. அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சிதான் ஆகும்.
மக்களாட்சி முறையில் பதவிகிட்டும் வரையில் மக்களோடு நெருங்கிப் பழகுவதும், பதவிகிட்டிய பின்னர் மக்களின்றும் விலகி மக்களை வெறுத்து மக்களுக்கு நன்மை பயவாத செயல்புரிவோரும் தோன்றிவிடுகின்றனர். அவர் ஆட்சி. பேயாட்சி; ஒழிக்கப்பட வேண்டிய ஆட்சியாகும்.
பேராசிரியர் சி.இலக்குவனார் :
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 737
Leave a Reply