ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! – சி.இலக்குவனார்

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது!       தம் கட்சிக்குள்ளேயும் தம்மை வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர். ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல் வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது. நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ,…

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவனார்

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை  மனநலத்தி னாகு மறுமைமற் றஃது           மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459)    மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும்.       அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு…

ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்

ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்!      உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன….

பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்-சி.இலக்குவனார்

பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை  ஒதுக்குதல் வேண்டும்   சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும் அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும். செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில் ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல் வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்…

ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் – சி.இலக்குவனார்

ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும்   ஆளும் தலைவர்க்கு வலிமையாவது மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆகும். மக்கள் அன்பைப் பெற்றதலைவர் பகைவரை எளிதில் வெல்வர். மக்கள் அன்பைப் பெற விரும்பினால், கடுஞ்சொல் அற்றவராய் இருத்தலோடு நேர்மையாகவும், யாவரிடமும் ஒத்த அன்புடையவராகவும் ஒழுகுதல் வேண்டும். உறவினர்க்கு ஒரு நீதியும் உறவினர் அல்லாதார்க்கு ஒரு நீதியும் வழங்குதல் கூடாது. நெறிமுறை கடந்து யாவர் செல்லினும், அவரை விருப்பு வெறுப்பின்றி ஒறுத்து நன்னெறிப்படுத்துதல் வேண்டும். இல்லையேல் மக்கள் வெறுப்பர். மக்கள் வெறுப்பின், மாபெரும் தலைவரும் தாழ்ச்சியுற…

அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இலக்குவனார்

அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி   ஆட்சி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளோர். முறை வேண்டுவார்க்கும் குறை வேண்டுவார்க்கும் காட்சிக்கு எளியராய் இன்முகம் உடையராய் இருத்தல்  வேண்டும். பதவியின் உயர்வால் மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் பேயைப்போல் மக்களால் அவரும் அஞ்சப்படுவர். மக்கள் உளத்தில் அன்பை வளர்த்து ஆளுதல் வேண்டுமேயன்றி, அச்சத்தைப் புகுத்தி ஆளமுயலுதல் கூடாது. அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சிதான் ஆகும்.    மக்களாட்சி முறையில் பதவிகிட்டும் வரையில் மக்களோடு நெருங்கிப் பழகுவதும், பதவிகிட்டிய பின்னர்…

மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார்

மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர்     ஆளும் நிலையில் இருப்போர், மக்கள் விரும்பாத கொடுஞ் செயல்களைப் புரியின், “நம்மை ஆள்கின்றவர் கொடியர்” என்று மக்களால் வெறுக்கப்படுவர். மக்கள் ஆட்சியில் மக்களால் வெறுக்கப்படுவோர் ஆளும் நிலையிலிருந்து அகற்றப்படுவர். சில நாடுகளில்,  ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருக்கலாம். மறுதேர்தலில் மக்கள் மதிப்பிழந்து வீழ்ச்சியடைவர். சில நாடுகளில் ஆளும் காலத்திலேயே கொடியோரை வேண்டாம் என்று விலக்கும் முறைமை  இருக்கின்றது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட காலம்…

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்     பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார்.      அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்…